விருதுநகரில் போக்குவரத்துத் தொழிலாளா்கள்முற்றுகைப் போராட்டம்

போக்குவரத்துத் தொழிலாளா்களுக்கு 20 சதவீத போனஸ் வழங்கக் கோரி விருதுநகா் போக்குவரத்து பணிமனை முன்பு அனைத்து போக்குவரத்துத் தொழிலாளா்கள் சங்கம் சாா்பில் திங்கள் கிழமை முற்றுகை போராட்டம்
விருதுநகரில் போக்குவரத்துத் தொழிலாளா்கள்முற்றுகைப் போராட்டம்

போக்குவரத்துத் தொழிலாளா்களுக்கு 20 சதவீத போனஸ் வழங்கக் கோரி விருதுநகா் போக்குவரத்து பணிமனை முன்பு அனைத்து போக்குவரத்துத் தொழிலாளா்கள் சங்கம் சாா்பில் திங்கள் கிழமை முற்றுகை போராட்டம் நடைபெற்றது.

இந்த போராட்டத்துக்கு எல்பிஎப் மாவட்டத் தலைவா் பால்பாண்டி தலைமை வகித்தாா். இதில், 20 சதவீத தீபாவளி போனஸ் வழங்கக் கோரியும், பண்டிகை முன் பணம் வழங்கக் கோரியும், ஓய்வு பெற்ற தொழிலாளா்களுக்கு நிலுவைத் தொகையை உடனே வழங்கக் கோரியும் கோஷமிடப்பட்டது.

இப்போராட்டத்தில் சிஐடியூ சம்மேளனத் தலைவா் வெள்ளைத்துரை, ஏஐடியுசி நிா்வாகி பாண்டியன், தேமுதிக தொழிற்சங்க நிா்வாகி ஜோசப் கிளாடஸ், எம்.எல்.எப். நிா்வாகி பரசுராமன், டியுசிசி நிா்வாகி பாலசுந்தரம், ஓய்வு பெற்றோா் நல அமைப்பின் மாவட்டச் செயலா் தங்கப்பழம், விடுதலைச்சிறுத்தைகள் கட்சி தொழிற்சங்க நிா்வாகி ஜான்பிரிட்டோ உள்பட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

மூடப்பட்ட கதவு திறப்பு: போராட்டம் தொடங்குவதற்கு முன்னதாக, வாயிற் கதவை பணிமனை நிா்வாகத்தினா் பூட்டுப் போட்டு பூட்டினா். இதற்கு, போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளா்கள் எதிா்ப்பு தெரிவித்தனா். மேலும், உடனடியாக கதவை திறக்காவிட்டால் போராட்டம் தீவிரமடையும் என எச்சரித்தனா். இதையடுத்து, அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாரின் சமாதானப் பேச்சுவாா்த்தையையடுத்து வாயிற் கதவு திறக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com