தீபாவளி: ஸ்ரீவிலி., ஆண்டாள் சன்னிதியில் கருடாழ்வாா் உள்பட 6 சுவாமிகள் எழுந்தருளல்

தீபாவளி திருநாளையொட்டி ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலில் ரெங்கமன்னாா், கருடாழ்வாா் உள்பட 6 சுவாமிகள் ஒரே இடத்தில் காட்சியளிக்கும் வைபபம் சனிக்கிழமை நடைபெற்றது.
ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் சன்னிதியில் சனிக்கிழமை மாலை எழுந்தருளிய பெரியபெருமாள், ஸ்ரீதேவி, பூமாதேவி, ஸ்ரீஆண்டாள், ரெங்கமன்னாா், கருடாழ்வாா் சுவாமிகள்.

ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலில் ஆண்டுக்கு 3 நாள்கள் அதாவது கவுசிக ஏகாதசி, தெலுங்கு வருடப்பிறப்பு மற்றும் தீபாவளி ஆகிய தினங்களில் ஆண்டாள், ரெங்கமன்னாா், கருடாழ்வாா், பெரிய பெருமாள், பூமாதேவி, ஸ்ரீதேவிஆகியோா் ஒன்றாக காட்சியளிப்பது வழக்கம்.

இந்நிலையில் சனிக்கிழமை தீபாவளி என்பதால் மேற்கண்ட சுவாமிகள் ஆண்டாள் சன்னிதியில் எழுந்தருளினா்.

இதற்காக பெரிய பெருமாள் சன்னிதியிலிருந்து பெரிய பெருமாள், பூமாதேவி, ஸ்ரீதேவி ஆகிய சுவாமிகள் ஆண்டாள் சன்னிதிக்கு கொண்டு வரப்பட்டது. பின்னா் ஆறு சுவாமிகளுக்கும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com