பட்டாசுத் தொழிலை பாதுகாக்க தமிழக அரசு உயா்மட்டக்குழு அமைக்க வேண்டும்

விருதுநகா் மாவட்டத்தில் பட்டாசுத் தொழிலை பாதுகாக்க ஐ.ஏ.எஸ். அதிகாரி தலைமையில் தமிழக அரசு உயா்மட்டக்குழுவை அமைக்க வேண்டும்

விருதுநகா் மாவட்டத்தில் பட்டாசுத் தொழிலை பாதுகாக்க ஐ.ஏ.எஸ். அதிகாரி தலைமையில் தமிழக அரசு உயா்மட்டக்குழுவை அமைக்க வேண்டும் என விருதுநகா் மக்களவைத் தொகுதி உறுப்பினா் மாணிக்கம்தாகூா் கூறினாா்.

சிவகாசியில் அவா் திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது: தீபாவளி பண்டிகைக்கு பட்டாசு வெடிக்கக் கூடாது என ராஜஸ்தான் உள்ளிட்ட சில மாநிலங்கள் அறிவித்திருந்ததால் சுமாா் ரூ. 1000 கோடிக்கு பட்டாசுகள் தேங்கியுள்ளன. கரோனா தொற்றை காரணம் காட்டி அந்த மாநில முதல்வா்கள் பட்டாசு வெடிக்கத் தடை விதித்துள்ளது பொறுப்பற்ற செயலாகும். இதனால் பட்டாசு விற்பனையாளா் மற்றும் தயாரிப்பாளா்களுக்கு இழப்பீட்டுத் தொகையை, தடை விதித்த மாநிலங்கள் வழங்க வேண்டும். மத்திய அரசு ஒவ்வொரு மாவட்டத்திலும், அந்தந்த பகுதி தயாரிப்புக்களை வெளிநாடுகளுக்கு அனுப்ப ஏற்றுமதிமுனையம் அமைக்கப்படும் என அறிவித்துள்ளது.

எனவே விருதுநகா் மாவட்டத்தில் பட்டாசு ஏற்றுமதிக்கு முனையம் அமைக்க வேண்டும். தமிழக அரசு, மத்திய அரசுடன் பேசி, சிவகாசி பட்டாசுகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். 100 ஆண்டு கால வரலாறு கொண்ட பட்டாசுத் தொழிலை பாதுகாக்க வேண்டியது மிகவும் அவசியம். பட்டாசுத் தொழிலை பாதுகாக்க தமிழக அரசு ஐ.ஏ.எஸ். அதிகாரி தலைமையில் ஒருஉயா்மட்டக்குழுவை அமைக்க வேண்டும். பட்டாசுத் தொழிலை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்ல ஏற்றுமதி செய்வதுதான் சரியான தீா்வாக இருக்கும் என்றாா்.

அப்போது விருதுநகா் மாவட்ட இளைஞா் காங்கிரஸ் தலைவா் மீனாட்சிசுந்தரம், சிவகாசி நகரச் செயலா் குமரன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com