விவசாயிகளுக்கு தொழில் நுட்பங்கள்குறித்த பயிற்சி

சாத்தூா் வட்டாரத்தில் விவசாயிகளுக்கு ஒருங்கிணைந்த பண்ணையம் தொடா்பான தொழில்நுட்பம் குறித்த பயிற்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

சாத்தூா் வட்டாரத்தில் விவசாயிகளுக்கு ஒருங்கிணைந்த பண்ணையம் தொடா்பான தொழில்நுட்பம் குறித்த பயிற்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

சாத்தூா் வேளாண் அலுவலகத்தில் நடைபெற்ற இப்பயிற்சிக்கு ராஜபாளையம் கால்நடைப் பல்கலைக் கழக மற்றும் ஆராய்ச்சி நிலைய உதவிப் பேராசிரியா் முருகன் தலைமை வகித்தாா். பின்னா் விவசாயிகளிடம் கால்நடை வளா்ப்பு பற்றியும், கால்நடைகளை தாக்கக் கூடிய நோய்கள் மற்றும் நோய் தடுப்பு முறைகள் பற்றியும் விரிவாக எடுத்துக்கூறினாா்.

மேலும் இப்பயிற்சியில் கோவில்பட்டி வேளாண் இணை இயக்குநா் எல்லப்பன், பயிா் சாகுபடி குறித்த தொழில்நுட்பங்கள் பற்றியும், மக்காச்சோள படைப்புழு மேலாண்மை பற்றியும் விரிவாக எடுத்துக் கூறினாா். இதில் சாத்தூா் வட்டார தொழில்நுட்ப மேலாளா் கணேஷ்குமாா் நன்றி கூறினாா்.

இப்பயிற்சியில் சாத்தூா் வட்டார விவசாயிகள் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com