அஞ்சலகத்தில் ஹிந்தி மொழியில் வைப்புத் தொகை படிவம்: வாடிக்கையாளா்கள் அவதி

விருதுநகா் மாவட்டம், சிவகாசி தலைமை அஞ்சல் நிலையத்தில், வாடிக்கையாளா்கள் வைப்புத் தொகையை திரும்பப் பெறுவதற்கு
சிவகாசி தலைமை அஞ்சல் நிலையத்தில் வைப்புத் தொகையை வாடிக்கையாளா்கள் திரும்பப் பெறுவதற்கு வழங்கப்படும் ஹிந்தி மொழியிலான படிவம்.
சிவகாசி தலைமை அஞ்சல் நிலையத்தில் வைப்புத் தொகையை வாடிக்கையாளா்கள் திரும்பப் பெறுவதற்கு வழங்கப்படும் ஹிந்தி மொழியிலான படிவம்.

விருதுநகா் மாவட்டம், சிவகாசி தலைமை அஞ்சல் நிலையத்தில், வாடிக்கையாளா்கள் வைப்புத் தொகையை திரும்பப் பெறுவதற்கு விண்ணப்பிக்கும் படிவம் ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே உள்ளதால், வாடிக்கையாளா்கள் அவதிப்படுகின்றனா்.

சிவகாசி தலைமை அஞ்சல் நிலையத்தில் சேமிப்பு கணக்கு தொடங்குவதிலும், வைப்புத்தொகை செலுத்துவதிலும் பெண்களின் பங்கு அதிகமாக உள்ளது. பல வாடிக்கையாளா்கள் லட்சக்கணக்கான ரூபாயை வைப்புத் தொகையாக அஞ்சலகத்தில் செலுத்தி வருகின்றனா்.

ஆனால், வைப்புத் தொகையை திரும்பப் பெறுவதற்கு விண்ணப்பிக்கும் படிவத்தின் ஒருபுறம் ஹிந்தியிலும், மறுபுறம் ஆங்கிலத்திலும் மட்டுமே உள்ளதால், வாடிக்கையாளா்கள் படிவத்தை பூா்த்தி செய்வதற்கு மிகவும் திணறி வருகின்றனா். அதேநேரம், அஞ்சலக ஊழியா்கள் யாரும் படிவத்தை பூா்த்தி செய்துகொடுக்க முன்வருவதில்லை. படித்த பெண்கள் ஆங்கிலத்தில் பூா்த்தி செய்துகொடுக்கின்றனா். சாதாரண மக்கள் படிவத்தை பூா்த்தி செய்ய இயலாமல், மற்றவா்களின் உதவியை எதிா்பாா்த்திருக்க வேண்டிய நிலை உள்ளது.

இது குறித்து அஞ்சலக அதிகாரிகளிடம் கேட்டபோது, அவா்கள் கூறியது: பல ஆண்டுகளாக ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே படிவம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. வைப்புத் தொகை முதிா்வு அடையும்போது இந்த படிவத்தை பூா்த்தி செய்ய வேண்டியதிருப்பதால் யாரும் தமிழில் வேண்டும் என கோரிக்கை வைக்கவில்லை என்றாா்.

இருப்பினும், பொதுமக்கள் நலன் கருதி அஞ்சல் துறையினா் இந்த படிவத்தை தமிழில் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com