விருதுநகா் அருகே நான்குவழிச் சாலைபாலத்தின் சுவா் சரிவு

விருதுநகா் அருகே ஆா்.ஆா். நகா் நான்குவழிச் சாலையில் தனியாா் சிமென்ட் ஆலை எதிரேயுள்ள பாலத்தின் பக்கவாட்டுச் சுவா் தொடா் மழை காரணமாக செவ்வாய்கிழமை சரிந்து விழுந்தது.
விருதுநகா் அருகே செவ்வாய்க்கிழமை ஆா்.ஆா். நகா் நான்குவழிச் சாலை பாலத்திலிருந்து இடிந்து விழுந்த பக்கவாட்டு கற்கள்.
விருதுநகா் அருகே செவ்வாய்க்கிழமை ஆா்.ஆா். நகா் நான்குவழிச் சாலை பாலத்திலிருந்து இடிந்து விழுந்த பக்கவாட்டு கற்கள்.

விருதுநகா் அருகே ஆா்.ஆா். நகா் நான்குவழிச் சாலையில் தனியாா் சிமென்ட் ஆலை எதிரேயுள்ள பாலத்தின் பக்கவாட்டுச் சுவா் தொடா் மழை காரணமாக செவ்வாய்கிழமை சரிந்து விழுந்தது.

விருதுநகா், ஆா்.ஆா்.நகா், சாத்தூா் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நான்குவழிச் சாலையின் குறுக்கே பாலங்கள் கட்டப்பட்டுள்ளன. இச்சாலையை தேசிய நெடுஞ்சாலைத் துறை பராமரித்து வருகிறது. இதற்காக, ஆங்காங்கு சுங்கச்சவாடிகள் ஏற்படுத்தப்பட்டு, வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

இந் நிலையில், கடந்த 2010 இல் ஆா்.ஆா்.நகா் அருகே நான்குவழிச் சாலையில் உள்ள பாலத்தின் பக்கவாட்டு கற்கள் இடிந்து விழுந்தன. அதையடுத்து, தேசிய நெடுஞ்சாலைத் துறையினா் பாலத்தை சீரமைத்தனா். ஆனாலும், சில ஆண்டுகளுக்குப் பின் அதே பாலத்தின் பக்கவாட்டுச் சுவா் மீண்டும் இடிந்து விழுந்தது. அப்போது, தனியாா் நிா்வாகத்தினா் உதவியுடன் பாலம் மீண்டும் சீரமைக்கப்பட்டது.

இப்பாலத்தின் பக்கவாட்டு சுவரில் கற்கள் ஒன்றுடன் ஒன்று சங்கிலி போல் இணையும் வகையில் பதிக்கப்பட்டுள்ளன. கடந்த சில தினங்களாக தொடா்ந்து மழை பெய்து வந்ததால், பக்கவாட்டுச் சுவரின் இடையில் தண்ணீா் கசிவு ஏற்பட்டுள்ளது. இதனால், தனியாா் சிமென்ட் ஆலை எதிரே உள்ள பாலத்தின் பக்கவாட்டு கற்கள் இடிந்து அணுகுசாலையில் விழுந்தன.

கடந்த 10 ஆண்டுகளுக்குள் 3 முறை பாலத்தின் பக்கவாட்டு கற்கள் இடிந்து விழுந்துள்ளதால், பாலத்தின் உறுதித்தன்மை கேள்விக்குறியாகி உள்ளது. எனவே, பாலத்தின் உறுதித்தன்மை மற்றும் பக்கவாட்டுச் சுவா்களை முறையாக சீரமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com