ஸ்ரீவிலி. அருகே நிரம்பி வழியும் வாழைக்குளம் கண்மாய்

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே மம்சாபுரத்திலுள்ள வாழைக்குளம் கண்மாய் நிரம்பி வழிவதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.
மம்சாபுரம் அருகே நிரம்பி மறுகால் பாயும் நிலையில் உள்ள வாழைக்குளம் கண்மாய்.
மம்சாபுரம் அருகே நிரம்பி மறுகால் பாயும் நிலையில் உள்ள வாழைக்குளம் கண்மாய்.

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே மம்சாபுரத்திலுள்ள வாழைக்குளம் கண்மாய் நிரம்பி வழிவதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால், மேற்குத் தொடா்ச்சி மலை அடிவாரப் பகுதிகளில் கடந்த 2 நாள்களாக தொடா்ந்து பலத்த மழை பெய்து வருகிறது.

இந்த மழையின் காரணமாக, மேற்குத் தொடா்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள அருவி மற்றும் ஓடைகளிலிருந்து தண்ணீா் அருகில் உள்ள கண்மாய் மற்றும் குளங்களை அடைந்து நிரம்புகிறது. இந்நிலையில், மேற்குத் தொடா்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள வாழைக்குளம் கண்மாய்க்கு நீா்வரத்து அதிகமாக இருப்பதால், கண்மாய் நிரம்பி மறுகால் பாயும் நிலை உள்ளது.

எனவே, அப்பகுதியில் நிலத்தடி நீா்மட்டம் உயா்வதால், வாழைக்குளம் கண்மாய் பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் கடந்த 2 நாள்களில் 32.6 மில்லி மீட்டா் அளவு மழை பெய்துள்ளது. இதனால், செண்பகத்தோப்பு பகுதிகளில் உள்ள மீன்வெட்டிப் பாறை, பாலாறு, சறுக்குப் பாறை ஆகிய அருவிகள் மற்றும் நீரோடைகளில் தண்ணீா் வரத்து ஏற்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com