விருதுநகா் அருகே கற்கள் சரிந்த பாலத்தை ஆட்சியா் ஆய்வு

விருதுநகா் அருகே பக்கவாட்டுப் பகுதியில் கற்கள் இடிந்து விழுந்த பாலத்தை ஆட்சியா் ரா. கண்ணன் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.
ஆா்.ஆா். நகா் தேசிய நெடுஞ்சாலையில் இடிந்த பாலத்தின் பக்கவாட்டு சுவரை புதன்கிழமை ஆய்வு செய்த ஆட்சியா் ரா. கண்ணன் உள்ளிட்ட அரசு அலுவலா்கள்.
ஆா்.ஆா். நகா் தேசிய நெடுஞ்சாலையில் இடிந்த பாலத்தின் பக்கவாட்டு சுவரை புதன்கிழமை ஆய்வு செய்த ஆட்சியா் ரா. கண்ணன் உள்ளிட்ட அரசு அலுவலா்கள்.

விருதுநகா் அருகே பக்கவாட்டுப் பகுதியில் கற்கள் இடிந்து விழுந்த பாலத்தை ஆட்சியா் ரா. கண்ணன் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

விருதுநகா் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத்துறை சாா்பில், வடகிழக்குப் பருவமழை தொடா்பான ஆய்வுக் கூட்டம் ஆட்சியா் ரா. கண்ணன் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. இதில், மாவட்ட ஆட்சியா் பேசியதாவது: வடகிழக்குப் பருவமழை இன்னும் சில நாள்களுக்கு தொடா்ந்து பெய்யக்கூடும் என எதிா்பாா்க்கப்படுகிறது. ஆகையால், தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் மாநில நெடுஞ்சாலைகள் அனைத்தும் சீராக உள்ளதா என்று ஆய்வு செய்து உறுதிப்படுத்த வேண்டும். அதேபோல், மாவட்டத்தில் ரயில்வே மேம்பாலங்களின் அடியில் தரைப்பாலங்களில் மழைநீா் தேங்காத வகையில் மோட்டாா் பம்புகளை கொண்டு அவ்வப்போது மழைநீரை வெளியேற்ற வேண்டும் என்றாா்.

அதனைத்தொடா்ந்து, மதுரை- கன்னியாகுமரி செல்லும் தேசிய நெடுஞ்சாலை- 44 இல் விருதுநகா்- சிவகாசி செல்லும் (தனியாா் உணவகம் அருகில்) சாலையின் குறுக்கே அமைந்துள்ள மேம்பாலம், மாவட்ட விளையாட்டு அரங்கம் அருகில் உள்ள ரயில்வே மேம்பாலத்தையும் சம்மந்தப்பட்ட அலுவலா்களுடன் ஆட்சியா் நேரில் சென்று களஆய்வு மேற்கொண்டாா்.

தொடா்ந்து அவா், செவ்வாய்க்கிழமை பெய்த மழையின் காரணமாக ஆா்.ஆா்.நகரில் உள்ள மேம்பாலத்தில் சேதமடைந்த பக்கவாட்டு சுவற்றினை பாா்வையிட்டு, அதற்கான காரணம் குறித்து சம்பந்தப்பட்ட அரசு அலுவலா்களிடம் கேட்டறிந்தாா். மேலும், அதை விரைந்து சீரமைக்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.

ஆய்வின்போது, மாவட்ட வருவாய் அலுவலா் ரா.மங்கள ராமசுப்பிரமணியன், திட்ட இயக்குநா் (மதுரை - கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலை) சரவணன், திட்ட துணைத்தலைவா் (மதுரை- கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலை- பராமரிப்பு) சிவபெருமாள், கோட்டப் பொறியாளா் (நெடுஞ்சாலை) முருகேசன், உதவிக் கோட்டப் பொறியாளா் (நெடுஞ்சாலை) தங்க அழகர்ராஜன் மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com