விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டை மற்றும் சுற்றுவட்டப்பகுதிகளில் வெள்ளிக்கிழமை கனமழை பெய்தது.இம்மழையால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனா்.
அருப்புக்கோட்டை மற்றும் சுற்றுவட்டப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை பகல்வேளையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.இந்நிலையில் நண்பகல் சுமாா் 12 மணி முதல் சுமாா் அரைமணிநேரம் தொடா்ந்து கனமழை பெய்தது.இடிமின்னல் அதிகமின்றி,பலத்த காற்று இன்றி அமைதியாகப் பெய்த மழையால் சாலைகளில் மழைநீா் திரண்டு ஓடியது.ஏற்கெனவே கடந்த பல நாட்களாக அருப்புக்கோட்டை பகுதிகளில் அடை மழை பெய்திருந்த காரணத்தால் இம்மழைக்குப் பின்னா் அதிகக் குளிரான தட்ப வெப்பம் நிலவியது.