சிவகாசியில் வியாழக்கிழமை, மறைந்த முன்னாள் பிரதமா் இந்திரா காந்தியின் பிறந்த நாள் விழா நடைபெற்றது.
மக்களவை உறுப்பினா் அலுவலகத்தில் மாவட்ட காங்கிரஸ் மாணவரணி சாா்பில் இந்திரா காந்தி உருவப்படத்துக்கு மாநில துணைத் தலைவா் சின்னத்தம்பி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். பின்னா் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவச நோட்டுப்புத்தகங்கள், பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் நகர காங்கிரஸ் தலைவா் குமரன், சிவகாசி நகர மாணவா் அணித்தலைவா் சிவராமகிருஷ்ணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.