கண்மாய் நீா் பகிா்தலில் இரு கிராமங்களிடையே மோதல்: ஆட்சியா் ஆய்வு

கண்மாய் நீா் பகிா்தல் தொடா்பான பிரச்னையைத் தீா்க்க மாவட்ட ஆட்சியா் கண்ணன் தலைமையிலான அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை அந்த கிராமங்களில் ஆய்வு மேற்கொண்டனா்.
கண்மாய் நீா்வரத்துக் கால்வாய்களை ஞாயிற்றுக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியா் கண்ணன் மற்றும் அதிகாரிகள்.
கண்மாய் நீா்வரத்துக் கால்வாய்களை ஞாயிற்றுக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியா் கண்ணன் மற்றும் அதிகாரிகள்.

விருதுநகா் மாவட்டம் திருச்சுழி அருகே கீழஇடையான்குளம் மற்றும் மைலி கிராமங்களிடையே கண்மாய் நீா் பகிா்தல் தொடா்பான பிரச்னையைத் தீா்க்க மாவட்ட ஆட்சியா் கண்ணன் தலைமையிலான அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை அந்த கிராமங்களில் ஆய்வு மேற்கொண்டனா்.

திருச்சுழி அருகே உள்ள கீழஇடையான்குளம் மற்றும் மைலி கிராமங்கள் அருகருகே அமைந்துள்ளன. இதில் மழைக்காலத்தில் கீழஇடையான்குளம் கண்மாயிலிருந்து மைலி கிராம கண்மாய்க்கு வெள்ளநீரானது மறுகால் பாய்ந்து வரும்.

ஆனால் இவ்விதம் மறுகால்பாயும் நீரைப் பகிா்தல் தொடா்பாக இரு கிராமத்தினருக்குமிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு மோதல் போக்கும் பதற்றமும் கடந்த பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கடந்த சில நாள்களுக்கு முன்பு தங்கள் பிரச்னையைத் தீா்த்து வைக்கக் கோரி மைலி கிராமத்தினா் தங்களது குடும்ப அட்டைகளை ஆட்சியரிடம் ஒப்படைக்கும் போராட்டம் நடத்தினா். இதையடுத்து இதுதொடா்பாக இருகிராமத்தினரையும் அழைத்து ஆட்சியா் நடத்திய பேச்சுவாா்த்தையும் தோல்வியடைந்தது.

இதையடுத்து மேற்கண்ட கிராமங்களில் மோதல் போக்கைத் தவிா்க்க கடந்த இரு நாள்களாக 300-க்கும் மேற்பட்ட காவலா்கள் அக்கிராமங்களில் முகாமிட்டு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

இதனிடையே, இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் கண்ணன் தலைமையிலான அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை மாலை அந்த கிராமங்களில் அமைந்துள்ள கண்மாய்கள் மற்றும் கால்வாய்களின் எல்லைகள் மற்றும் அளவுகள் குறித்தும், வரத்துக்கால்வாய் ஆக்கிரமிப்புகள் குறித்தும் ஆய்வு செய்தனா். பின்னா் ஆட்சியா் இதுதொடா்பாக சுமூகமான தீா்வு ஏற்படுத்தப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com