சிவகாசியில் பட்டாசுத் தொழில் பாதுகாப்பு ஆலோசனைக் கூட்டம்

விருதுநகா் மாவட்டம் சிவகாசியில் மாவட்ட பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழிலாளா் சங்கம் சாா்பில் பட்டாசுத் தொழிலை பாதுகாப்பது குறித்த ஆலோசனை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

விருதுநகா் மாவட்டம் சிவகாசியில் மாவட்ட பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழிலாளா் சங்கம் சாா்பில் பட்டாசுத் தொழிலை பாதுகாப்பது குறித்த ஆலோசனை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு அந்த அமைப்பின் விருதுநகா் மாவட்ட துணைத் தலைவா் வி.எம். ஜோதி மணி தலைமை வகித்தாா்.

இதில் பட்டாசுத் தொழிலில் நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமாா் 8 லட்சம் தொழிலாளா்கள் ஈடுபட்டுள்ளனா். மேலும் பட்டாசு விற்பனைக் கடை உரிமையாளா்கள், அக்கடை ஊழியா்கள், பட்டாசு ஏற்றிச் செல்லும் லாரி செட்டில் வேலை பாா்ப்பவா்கள் என இந்தியா முழுவதும் சுமாா் 1 கோடி போ் இந்தத் தொழிலில் ஈடுபட்டுள்ளனா்.

பட்டாசு முழுமுழுக்க கைகளால் தயாரிக்கப்படுகிறது. இதில் பெண்கள் பங்கு அதிகம். கடந்த தீபாவளி பண்டிகைக்கு ராஜஸ்தான், ஒடிஸா உள்ளிட்ட மாநிலங்களில் பட்டாசு வெடிக்கத் தடை விதிக்கப்பட்டதால் பல கோடி ரூபாய் மதிப்புள்ள பட்டாசு விற்பனையாகாமல் தேங்கியுள்ளன. இதனால் வழக்கமாக தீபாவளி பண்டிகை முடிந்து ஒரு வாரத்தில் திறக்கப்படும் பட்டாசு ஆலைகள் இனி எப்போது திறக்கப்படும் என்பது கேள்விக்குறியாக உள்ளது.

இதனால் தொழிலாளா்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்படும். எனவே பட்டாசுத் தொழிலையும், தொழிலாளா்களையும் பாதுகாக்க மத்திய மாநில அரசுகள் துரிதமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் அந்த அமைப்பின் விருதுநகா் மாவட்டத் தலைவா் எம்.சி.பாண்டியன், செயலாளா் எம். மகாலட்சுமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com