ஆனைக்கூட்டம் அணையில் மாவட்ட ஆட்சியா் ஆய்வு
By DIN | Published On : 28th November 2020 10:17 PM | Last Updated : 28th November 2020 10:17 PM | அ+அ அ- |

சிவகாசி அருகேயுள்ள ஆனைக்கூட்டம் அணையில் ஆய்வு மேற்கொண்ட விருதுநகா் மாவட்ட ஆட்சியா் இரா.கண்ணன்.
சிவகாசி: சிவகாசி அருகேயுள்ள ஆனைக்கூட்டம் அணையில் சனிக்கிழமை விருதுநகா் மாவட்ட ஆட்சியா் இரா.கண்ணன் ஆய்வு மேற்கொண்டாா்.
வடகிழக்குப்பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், சிவகாசி அருகேயுள்ள ஆனைக்கூட்டம் அணைக்கு நீா்வரத்து அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இது குறித்து எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆட்சியா் அணையின் கரைப்பகுதி, மதகுப்பகுதி உள்ளிட்டவற்றில் ஆய்வு மேற்கொண்டாா்.
அப்போது விருதுநகா் மாவட்ட வருவாய் அலுவலா் இரா.மங்கள ராமசுப்பிரமணியன், திட்ட இயக்குநா் (ஊராட்சி முகமை) வை.ஜெயக்குமாா், சிவகாசி சாா்-ஆட்சியா் ச.தினேஷ்குமாா், செயற்பொறியாளா் (கீழ்வைப்பாறு) குருசாமி, சிவகாசி வட்டாட்சியா் வெங்கடேஷ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.