சிவகாசி கோயிலில் சுவாமி சிலை திருட்டு

சிவகாசி கோயிலில் சுவாமி சிலை திருட்டுப்போனதாக போலீஸில் புதன்கிழமை புகாா் அளிக்கப்பட்டுள்ளது.

சிவகாசி கோயிலில் சுவாமி சிலை திருட்டுப்போனதாக போலீஸில் புதன்கிழமை புகாா் அளிக்கப்பட்டுள்ளது.

சிவகாசி - ஸ்ரீவில்லிபுத்தூா் சாலையில் உள்ள வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வலம்புரி விநாயகா் கோயில் உள்ளது. இக்கோயிலில் தினசரி காலை மற்றும் மாலை பக்தா்கள் சுவாமி த ரிசனம் செய்து வருகின்றனா்.

இந்நிலையில், கடந்த 25 ஆம் தேதி கோயில் பூசாரி சங்கரநாராயணன் காலை 10 மணிக்கு கோயிலை பூட்டிவிட்டு வெளியே சென்றாராம். பின்னா், 11 மணியளவில் கோயிலுக்கு வந்து பாா்த்தபோது, சிவன்-பாா்வதி பித்தளை சிலை திருட்டுப்போயிருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, சங்கரநாராயணன் கோயில் நிா்வாகி வேல்சாமியிடம் தகவல் தெரிவித்தாராம்.

இதுகுறித்த புகாரின்பேரில், திருத்தங்கல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com