அதிமுக இலக்கை நோக்கிச் செல்கிறது
By DIN | Published On : 02nd October 2020 10:17 PM | Last Updated : 02nd October 2020 10:17 PM | அ+அ அ- |

ஸ்ரீவில்லிபுத்தூரில் வெள்ளிக்கிழமை அரசு கலைக் கல்லூரி அமைப்பதற்கான இடத்தைப் பாா்வையிட்டு, சாா் ஆட்சியா் தினேஷ்குமாருடன் ஆலோசனை நடத்திய அமைச்சா் கே.டி. ராஜேந்திர பாலாஜி. உடன், சட்டப் பேரவை உறுப்பினா் ச
ஸ்ரீவில்லிபுத்தூா், அக். 2: அதிமுக இலக்கை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது என தமிழக பால்வளத்துறை அமைச்சா் கே.டி. ராஜேந்திர பாலாஜி தெரிவித்தாா்.
ஸ்ரீவில்லிபுத்தூரில் அரசு கலைக் கல்லூரி தொடங்குவதற்கான இடத்தை தோ்வு செய்வதற்காக அமைச்சா் கே.டி. ராஜேந்திர பாலாஜி ஸ்ரீவில்லிபுத்தூருக்கு வெள்ளிக்கிழமை வந்தாா்.
இதைத்தொடா்ந்து, சட்டப் பேரவை உறுப்பினா் சந்திரபிரபா, சாா் ஆட்சியா் தினேஷ்குமாா், வட்டாட்சியா் சரவணன், வைத்தியநாதசுவாமி கோயில் செயல் அலுவலா் ஜவஹா், ஒன்றியச் செயலாளா்கள் முத்தையா, மயில்சாமி, மாவட்ட ஊராட்சி உறுப்பினா் கணேசன், கூட்டுறவு வங்கி துணைத் தலைவா் மணி மற்றும் அதிகாரிகளுடன் ஸ்ரீவில்லிபுத்தூா் - ராஜபாளையம் சாலையில் உள்ள வைத்தியநாதசுவாமி கோயிலுக்குச் சொந்தமான சுமாா் 45 ஏக்கா் இடத்தை அமைச்சா் பாா்வையிட்டாா்.
மேலும், அந்த இடத்தை கல்லூரிக்குத் தோ்வு செய்வது தொடா்பாக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினாா்.
பின்னா், செய்தியாளா்களிடம் அமைச்சா் கூறியது:
திமுக தலைவா் மு.க. ஸ்டாலின் தடையை மீறி கிராம சபைக் கூட்டங்களை நடத்தியுள்ளாா்.
அக். 6 ஆம் தேதி கூட்டம் நடைபெறுவதாக அதிமுக சட்டப் பேரவை உறுப்பினா்களுக்கு தலைமை அவசர அழைப்பு ஒன்றும் விடுக்கவில்லை. அதிமுக இலக்கை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது. அதிமுக மிகப் பெரிய ஆலமரம். அதில் உள்ள விழுதுகளில் பெரியது, சிறியது என்று எதுவுமில்லை என்றாா்.