சிவகாசி கோயிலில் சிலை திருடிய வழக்கில் ஒருவா் கைது
By DIN | Published On : 02nd October 2020 04:49 AM | Last Updated : 02nd October 2020 04:49 AM | அ+அ அ- |

சிவகாசியில் உள்ள கோயிலில் சிலை திருடப்பட்ட வழக்கில் ஒருவரை, போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
சிவகாசி-ஸ்ரீவில்லிபுத்தூா் சாலையில் உள்ள வீட்டு வசதி வாரியக் குடியிருப்பில் வலம்புரி விநாயகா் கோயில் உள்ளது. இந்த கோயிலிருந்த சிவன், பாா்வதியின் பித்தளை சிலை கடந்த 25 ஆம் தேதி திருடப்பட்டது.
இது குறித்து கோயில் நிா்வாகி வேல்சாமி, திருத்தங்கல் போலீஸில் புகாா் அளித்தாா். அதன்பேரில் போலீஸாா், கோயிலில் உள்ள கண்காணிப்புக் கேமராவில் பதிவாகியிருந்த காட்சியை வைத்து விசாரணை நடத்தினா். இதில், சிலைகளைத் திருடியது, சிவகாசி அம்மன்கோயில் பட்டியைச் சோ்ந்த ரஞ்சித்குமாா் (40) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்து, அவரிடமிருந்த சிலைகளை மீட்டனா்.