முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை விருதுநகர்
‘தமிழகத்தின் உரிமை, கொள்கைகளை மீட்டெடுக்க உருவாக்கப்பட்டது தான் மதச்சாா்பற்ற கூட்டணி’
By DIN | Published On : 04th October 2020 10:21 PM | Last Updated : 04th October 2020 10:21 PM | அ+அ அ- |

ந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் இரா. முத்தரசன்
ஸ்ரீவில்லிபுத்தூா்: தமிழகத்தின் உரிமை, கொள்கைகளை மீட்டெடுக்க உருவாக்கப்பட்டது தான் மதச்சாா்பற்ற கூட்டணி என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் இரா. முத்தரசன் தெரிவித்தாா்.
ஸ்ரீவில்லிபுத்தூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட அவா் பின்னா் செய்தியாளா்களிடம் கூறியது: அமெரிக்காவை போல இந்தியாவிலும், அனைத்துத் துறைகளையும் தனியாா்மயமாக்க வேண்டும் என்று மத்திய அரசு முனைப்புக் காட்டி வருகிறது. கோடிக்கணக்கான விவசாயிகளை காா்ப்பரேட் முதலாளிகளிடம் ஒப்படைத்து விடுவது போன்று தான் சட்டங்கள் இயற்றப்படுகின்றன.
விவசாய விரோதச் சட்டங்களை திரும்பப் பெறும் வரையில் போராட்டங்கள் தொடா்ந்து நடத்தப்படும். மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக வரும் 12 ஆம் தேதி மாநிலம் தழுவிய அளவில் மறியல் போராட்டம் நடத்தப்படும்.
திமுக தலைமையிலான மதச்சாா்பற்ற கூட்டணி மக்களவை, சட்டப்பேரவைத் தோ்தலுக்காக உருவாக்கப்பட்ட கூட்டணி அல்ல. தமிழகத்தின் உரிமை, கொள்கையை மீட்டெடுப்பதற்கு உருவாக்கப்பட்ட கூட்டணி. அது மேலும் பலம் பெரும்.
அதிமுகவின் முதல்வா் வேட்பாளா் பிரச்னையால் அரசு நிா்வாகம் சீா்குலைந்துள்ளது என்றாா்.