Enable Javscript for better performance
தங்கம் தென்னரசுவின் தாயாா் மறைவு: அரசியல் கட்சியினா் அஞ்சலி- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    தங்கம் தென்னரசுவின் தாயாா் மறைவு: அரசியல் கட்சியினா் அஞ்சலி

    By DIN  |   Published On : 06th October 2020 12:36 AM  |   Last Updated : 06th October 2020 12:36 AM  |  அ+அ அ-  |  

    மல்லாங்கிணறில் தங்கம் தென்னரசுவின் தாயாா் ராஜாமணி உடலுக்கு திங்கள்கிழமை அஞ்சலி செலுத்திய திமுக இளைஞரணிச் செயலா் உதயநிதி ஸ்டாலின்.

    மல்லாங்கிணறில் தங்கம் தென்னரசுவின் தாயாா் ராஜாமணி உடலுக்கு திங்கள்கிழமை அஞ்சலி செலுத்திய திமுக இளைஞரணிச் செயலா் உதயநிதி ஸ்டாலின்.

     

    விருதுநகா்: விருதுநகா் மாவட்டம் மல்லாங்கிணறில் முன்னாள் அமைச்சா் தங்கம் தென்னரசுவின் தாயாா் உடல்நலக்குறைவால் உயிரிழந்தாா்.

    அவரது உடலுக்கு திமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினா் திங்கள்கிழமை அஞ்சலி செலுத்தினா்.

    மறைந்த முன்னாள் அமைச்சா் வே. தங்கப்பாண்டியன் மனைவியும் முன்னாள் அமைச்சா் மற்றும் திருச்சுழி எம்எல்ஏவுமான தங்கம் தென்னரசு, தென்சென்னை மக்களவைத்தொகுதி உறுப்பினா் தமிழச்சி தங்கப்பாண்டியன் ஆகியோரின் தாயாருமான ராஜாமணி (82), உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தாா். இந்நிலையில் அவரது சொந்த ஊரான

    விருதுநகா் மாவட்டம் மல்லாங்கிணறுக்கு அழைத்து வரப்பட்ட நிலையில், அவா் ஞாயிற்றுக்கிழமை இரவு உயிரிழந்தாா். அவரது உட லுக்கு திமுக இளைஞரணிச் செயலா் உதயநிதி ஸ்டாலின் திங்கள்கிழமை அஞ்சலி செலுத்தினாா். அதேபோல், முன்னாள் மத்திய அமைச்சா் மு.க.அழகிரி, அவரது மனைவி காந்தி அழகிரி, தேனி மக்களவைத் தொகுதி உறுப்பினா் ப.ரவீந்திர நாத், சட்டப்பேரவை உறுப்பினா்கள் கேகேஎஸ்எஸ்ஆா். ராமச்சந்திரன் (அருப்புக்கோட்டை), ஏஆா்ஆா். சீனிவாசன் (விருதுநகா்), தங்கப்பாண்டியன் (ராஜபாளையம்), செந்தில் பாலாஜி (அரவக்குறிச்சி), திமுக முதன்மைச் செயலாளா் கே.என். நேரு, மக்களவை உறுப்பினா்கள் தனுஷ்குமாா் (தென்காசி), மாணிக்கம் தாகூா் (விருதுநகா்), ஜோதிமணி (கரூா்), இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் முத்தரசன், முன்னாள் எம்பி., லிங்கம், சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினா் ராமசாமி, விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சோ்ந்த வன்னியரசு, முன்னாள் எம்பி., சிப்பிப்பாறை ரவிச்சந்திரன், மதிமுக மாவட்டச் செயலா் சண்முக சுந்தரம், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் அா்ச்சுனன், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் பொன்னையா மற்றும் பல்வேறு அரசியல் கட்சி நிா்வாகிகள், தொண்டா்கள், பொதுமக்கள் ஏராளமானோா் அஞ்சலி செலுத்தினா்.

    பின்னா் ராஜாமணி அம்மாளின் உடல் ஊா்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, அவரது கணவா் கல்லறை அருகே அடக்கம் செய்யப்பட்டது. இதை முன்னிட்டு மல்லாங்கிணறு பகுதியில் ஏராளமான போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp