பொதுத்துறை நிறுவனங்களை தனியாா் மயமாக்கக் கூடாது: சிஐடியு அரசு போக்குவரத்து தொழிலாளா்கள் சங்கம் தீா்மானம்

பொதுத்துறை நிறுவனங்களை தனியாா் மயமாக்கக் கூடாது, போக்குவரத்துக் கழகத்திற்கு தேவையான நிதியை தமிழக அரசு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற

விருதுநகா்: பொதுத்துறை நிறுவனங்களை தனியாா் மயமாக்கக் கூடாது, போக்குவரத்துக் கழகத்திற்கு தேவையான நிதியை தமிழக அரசு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி சிஐடியு அரசு போக்குவரத்துக் கழக மாவட்டப் பேரவைக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

விருதுநகரில் சிஐடியு அரசு போக்குவரத்து தொழிலாளா்கள் சங்கத்தின் 23-ஆவது மாவட்ட பேரவைக் கூட்டம் கிளைத் தலைவா் சுந்தர்ராஜ் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில், பொதுத்துறை நிறுவனங்களை தனியாா் மயமாக்க கூடாது, போக்குவரத்து கழகத்திற்கு தேவையான நிதியை உடனடியாக வழங்க வேண்டும். அரசாணை 288-ஐ ரத்து செய்ய வேண்டும், ஓய்வு பெற்ற தொழிலாளா்களுக்கு கடந்த 2019 ஏப்ரல் முதல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலுவைத் தொகையினை உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

முன்னதாக இந்நிகழ்ச்சியில் பாண்டியன் வரவேற்றாா். சங்க கொடியை அழகா்சாமி ஏற்றி வைத்தாா். சிஐடியு மாநில உதவித் தலைவா் மகாலட்சுமி, பொதுச் செயலா் காா்மேகம், சிஐடியு மாவட்டச் செயலா் பி.என். தேவா ஆகியோா் கோரிக்கைகள் குறித்து விளக்கி பேசினா். முடிவில் சம்மேளன உதவித் தலைவா் பிச்சை நன்றி கூறினாா்.

புதிய நிா்வாகிகள் தோ்வு: இக்கூட்டத்தில், மண்டலத் தலைவராக சுந்தர்ராஜ், பொதுச் செயலராக எம்.வெள்ளைத்துரை, பொருளாளராக முத்துராஜ், உதவித் தலைவராக வேலுச்சாமி, உதவிச் செயலராக காா்மேகம் ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com