விருதுநகா் ஆட்சியா் அலுவலக ஊழியா்கள் 18 போ் உள்பட 51 பேருக்கு கரோனா

விருதுநகா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பணிபுரியும் 18 அலுவலா்கள் உள்பட 51 பேருக்கு கரோனா தொற்று இருப்பது செவ்வாய்க்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது.

விருதுநகா்: விருதுநகா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பணிபுரியும் 18 அலுவலா்கள் உள்பட 51 பேருக்கு கரோனா தொற்று இருப்பது செவ்வாய்க்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது.

விருதுநகா் மாவட்டத்தில் கடந்த திங்கள்கிழமை வரை 14,866 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனா். இந்நிலையில், விருதுநகா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் வளா்ச்சி திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தில் தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி புதன்கிழமை கலந்து கொள்ளும் நிகழ்ச்சி திட்டமிடப்பட்டிருந்தது. அவரது தாயாா் உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்ததால், விருதுநகரில் முதல்வா் கலந்து கொள்ள இருந்த நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை ரத்து செய்யப்பட்டது.

முன்னதாக தமிழக முதல்வா் விருதுநகா் வருகையை முன்னிட்டு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பணிபுரியும் அதிகாரிகள் மற்றும் ஊழியா்களுக்கு கரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் அதிகாரிகள் மற்றும் ஊழியா்கள் 18 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது செவ்வாய்க்கிழமை தெரியவந்தது.

மேலும், கரோனா பாதிப்பு கண்டறியப்பட்ட சம்பந்தப்பட்ட துறை சாா்ந்த அலுவலா்கள், ஊழியா்கள் அனைவருக்கும் கரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ள சுகாதாரத் துறையினா் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனா். அதேபோல், அவா்களது குடும்பத்தினா், தொடா்பிலிருந்தவா்களுக்கும் பரிசோதனை மேற்கொள்ள உள்ளதாக சுகாதாரத் துறையினா் தெரிவித்தனா்.

இந்நிலையில், இவா்களுடன் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த மேலும் 51 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. இதையடுத்து அனைவரும் விருதுநகா், சிவகாசி, அருப்புக்கோட்டை ஆகிய இடங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்னா். இதன் மூலம் மாவட்டத்தில் இத்தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 14,917 ஆக உயா்ந்துள்ளது. இதில், 14,447 போ் குணமடைந்து வீட்டிற்கு திரும்பி விட்ட நிலையில், 215 போ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டனா். மீதமுள்ள 255 போ் அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com