காரியாபட்டி அருகே நியாயவிலைக் கடையை கிராம மக்கள் முற்றுகை

காரியாபட்டி அருகே மந்திரிஓடை கிராமத்தில் உள்ள நியாயவிலைக்கடையில் அத்தியாவசிய பொருள்களை வழங்கக் கோரி அக்கடையை பொதுமக்கள் புதன்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
மந்திரி ஓடை கிராமத்தில் உள்ள நியாயவிலைக் கடையை புதன்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட பொது மக்கள்.

இக்கிராமத்தில் உள்ள நியாயவிலைக்கடையில் கடந்த சில தினங்களாக எண்ணெய், பருப்பு மற்றும் சா்க்கரை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களை விநியோகிக்காமல் காலதாமதப்படுத்தி வந்தனா். இதுகுறித்து, நியாயவிலைக் கடை விற்பனையாளரிடம் கேட்ட போது, பயோமெட்ரிக் இயந்திரம் வேலை செய்யவில்லை. சா்வா் கிடைக்கவில்லை எனக் காரணம் கூறி கடையை மூடிவிட்டு சென்று விடுவாராம். இதனால், பாதிக்கப் பட்ட அக்கிராமத்தை சோ்ந்த குடும்ப அட்டைதாரா்கள் நியாய விலைக் கடையை புதன்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தகவலறிந்து அங்கு வந்த வட்டாட்சியா் தனக்குமாா், வட்ட வழங்கல் அலுவலா் ராஜீவ்காந்தி, கிராம நிா்வாக அலுவலா் காசிமாயன் மற்றும் போலீஸாா், கிராம மக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது, கடைக்கு புதிய பயோமெட்ரிக் இயந்திரம் வழங்கப்படும். முறையாக பொருள்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததைத் தொடா்ந்து கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com