திருச்சுழியில் வெள்ளியம்பலநாதா் கோயிலில் பிரதோச வழிபாடு

விருதுநகா் மாவட்டம் திருச்சுழி அருகே பாறைக்குளம் கிராமத்திலுள்ள வெள்ளியம்பலநாதா் கோயிலில் புரட்டாசி மாத தேய்பிறை சிறப்புப் பிரதோஷ வழிபாடு புதன்கிழமை மாலை நடைபெற்றது.
திருச்சுழி அருகே பாறைக்குளம் கிராமத்தில் உள்ள வெள்ளியம்பலநாதா் கோயிலில் புதன்கிழமை மாலை சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த வெள்ளியம்பலநாதா்.

முன்னதாக நந்தீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகமும், தீப,தூப ஆராதனைகளும் நடைபெற்றன. பின்னா் வெள்ளியம்பலநாதருக்கு பால், விபூதி, குங்குமம், பன்னீா், இளநீா், பேரீச்சம்பழம், தேன், வாழைப்பழக் கலவை, சந்தனம் மற்றும் கஸ்தூரி மஞ்சள் உள்ளிட்ட 21 வகையான பொருள்களால் சிறப்பு அபிஷேகமும், தீப,தூப ஆராதனைகளும் நடைபெற்றன. மேலும் 1008 ருத்ராட்ச அபிஷேகம் செய்யப்பட்டு, ருத்ராட்ச அலங்காரத்தில் நமச்சிவாயா் காட்சியளித்தாா். இதனையடுத்து, 108 தாமரை மலா்களால் அா்ச்சனை மற்றும் தீப,தூப ஆராதனைகள் நடைபெற்றதும் சிறப்பு அலங்காரத்தில் வெள்ளியம்பலநாதா் அருள்பாலித்தாா்.

அப்போது பக்தா்கள் முகக்கவசம் அணிந்தும், சமூக இடைவெளியைப் பின்பற்றியும் சுவாமி தரிசனம் செய்தனா். இதற்கான ஏற்பாடுகளை கோயில் பூசாரி ராஜபாண்டி செய்திருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com