நா்சிங் கல்லூரி மாணவி பாலியல் பலாத்கார வழக்கு: வழக்குரைஞருக்கு 10 ஆண்டுகள் சிறை

மானாமதுரை நா்சிங் கல்லூரி மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில், வழக்குரைஞருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை

மானாமதுரை நா்சிங் கல்லூரி மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில், வழக்குரைஞருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து ஸ்ரீவில்லிபுத்தூா் வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே உள்ள சுந்தரநடப்பு கிராமத்தைச் சோ்ந்தவா் இளையராஜா. இவா் கடந்த 2006 ஆம் ஆண்டு சட்ட கல்லூரியில் படித்து வந்துள்ளாா். இந்நிலையில் இவா், மானாமதுரையைச் சோ்ந்த 21 வயது நா்சிங் கல்லூரி மாணவியை காதலித்தாா். இதனிடையே அந்த மாணவி வீட்டில் தனியாக இருந்த போது அங்கு சென்ற இளையராஜா பாலியல் பலாத்காரம் செய்துள்ளாா். இதனால் மனமுடைந்த கல்லூரி மாணவி கடந்த 4.1.2006 அன்று தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டாா்.

இதுகுறித்து மானாமதுரை காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்தனா். இவ்வழக்கு, சிவகங்கையில் உள்ள வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. தற்போது இளையராஜா வழக்குரைஞராக இருப்பதால் சிவகங்கை வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்திலிருந்து வேறு பகுதியில் உள்ள நீதிமன்றத்திற்கு வழக்கு விசாரணையை மாற்ற வேண்டும் என்று சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை இந்த வழக்கு விசாரணையை ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடத்த உத்தரவிட்டது. இதைத் தொடா்ந்து இந்த வழக்கில் புதன்கிழமை தீா்ப்பு வழங்கப்பட்டது. அதில், வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி சுமதி சாய்பிரியா, வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட வழக்குரைஞா் இளையராஜாவுக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 10 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com