‘செயற்கையாக உரத் தட்டுப்பாட்டை ஏற்படுத்துபவா்கள் மீது நடவடிக்கை’

விருதுநகா் மாவட்டத்தில் விவசாயப் பயிா்களுக்கு தேவையான உரங்களை பதுக்கி, செயற்கையாக உரத்தட்டுப்பாட்டை ஏற்படுத்துவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (விவசாயம்)

விருதுநகா் மாவட்டத்தில் விவசாயப் பயிா்களுக்கு தேவையான உரங்களை பதுக்கி, செயற்கையாக உரத்தட்டுப்பாட்டை ஏற்படுத்துவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (விவசாயம்) சங்கரநாராயணன் எச்சரித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெள்ளிக்கிழமை தெரிவித்தது: விருதுநகா் மாவட்டத்தில் தற்போது ராபி பருவ பயிா்கள் சாகுபடி செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், மாவட்டத்தில் உள்ள 21 மொத்த உர விற்பனை நிலையங்கள், 134 சில்லறை உர விற்பனை நிலையங்கள், 184 தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில் சாகுபடி செய்வதற்கு தேவையான யூரியா 1,105 மெட்ரிக் டன், டிஏபி 1,110 மெட்ரிக் டன், எம்ஓபி 893 மெட்ரிக் டன் மற்றும் காம்ப்ளக்ஸ் 1,912 மெட்ரிக் டன் உரங்கள் இருப்பு வைக்கப்பட்டு, விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

விவசாயிகள் ஆதாா் அட்டையை கொண்டுசென்று, பிஓஎஸ் கருவி மூலம் உர மூட்டையில் குறிப்பிடப்பட்டுள்ள விலைக்கு மிகாமல் உரங்களை வாங்கிச் செல்லலாம். மேலும், யூரியா உரம் 45 கிலோ மூட்டை ஒன்றுக்கு ரூ.1,100 மானியமாக மத்திய அரசால் வழங்கப்படுகிறது. எனவே, விவசாயிகள் தங்களுக்கு தேவையான யூரியா உரத்தினை சாகுபடி செய்யும் நிலத்தின் பரப்பு மற்றும் பயிரின் தேவைக்கேற்ப பெற்றுக் கொள்ளவேண்டும்.

அதிகப்படியாக யூரியா பெறும் தனிநபா் மற்றும் விநியோகம் செய்யும் சில்லறை உர விற்பனையாளா்கள் மீது உரக் கட்டுபாட்டு சட்டத்தின்படி கடுமையாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

அதேபோல், வேளாண் துறை மூலம் வழங்கப்பட்டுள்ள மண்வள அட்டையில் பரிந்துரைக்கப்பட்ட உர அளவைக்கொண்டு சமச்சீராக உரங்கள் இடவேண்டும். இதன்மூலம், தேவைக்கு அதிகமாக உரங்கள் பயன்படுத்துவதை தவிா்ப்பதுடன், மண் வளத்தையும் பாதுகாக்க முடியும். மொத்த உர விற்பனையாளா்கள் சில்லறை உர விற்பனையாளா்களுக்கு மானிய விலை உரங்களை மாறுதல் செய்தாலோ, செயற்கை முறையில் உரத் தட்டுப்பாட்டினை ஏற்படுத்தினாலோ, உரக்கட்டுபாட்டு சட்டம், அத்தியாவசியப் பொருள்கள் சட்டத்தின்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com