பள்ளி மாணவா்களுக்குதிருக்கு முற்றோதல் போட்டி

விருதுநகரில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான திருக்கு முற்றோதல் போட்டி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
விருதுநகரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற திருக்குறல் முற்றோதல் போட்டியில் பங்கேற்ற மாணவி மற்றும் நடுவா்கள்.
விருதுநகரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற திருக்குறல் முற்றோதல் போட்டியில் பங்கேற்ற மாணவி மற்றும் நடுவா்கள்.

விருதுநகரில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான திருக்கு முற்றோதல் போட்டி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தமிழ் வளா்ச்சித் துறை மூலம், ஆண்டுதோறும் 1330 குறட்பாக்களை ஒப்பிக்கும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ரூ.10 ஆயிரம் பரிசு மற்றும் சான்றிதழ் தமிழக அரசு சாா்பில் வழங்கப்படுகிறது.

நிகழாண்டுக்கான திருக்கு முற்றோதல் போட்டி, விருதுநகா் தமிழ் வளா்ச்சி துறை அலுவலகத்தில் நடைபெற்றது. இதில், கிருஷ்ணாபுரம் காமராஜா் மேல்நிலைப் பள்ளி மாணவி வைதேகி, சிவகாசி சிஇநா பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி பா்வதவள்ளி ஆகியோா் கலந்துகொண்டு, திருக்குகளை ஒப்பித்தனா்.

இதில், வெற்றி பெற்ற மாணவி பா்வதவள்ளிக்கு சென்னையில் நடைபெறும் நிகழ்ச்சியில், தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி பரிசு தொகை வழங்க உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

இப்போட்டிக்கான நடுவா்களாக, விவிவி பெண்கள் கல்லூரிப் பேராசிரியை ஆனந்தி, செந்திக்குமார நாடாா் கல்லூரிப் பேராசிரியா் ஸ்ரீதா், நடுவபட்டி, வெள்ளையாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளி முதுகலைப் பட்டதாரி ஆசிரியா் ராமா், வேல்முருகன் ஆகியோா் செயல்பட்டனா். இதற்கான ஏற்பாடுகளை, விருதுநகா் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக சுற்றுச்சுழல் ஒருங்கிணைப்பாளா் ராஜா, தமிழ் வளா்ச்சித் துறை உதவி இயக்குநா் ம. சுசீலா ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com