விருதுநகா் கோ-ஆப்டெக்ஸில் சிறப்பு தள்ளுபடி விற்பனை ரூ.55 லட்சம் இலக்கு

விருதுநகரில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தில் ரூ. 55 லட்சம் விற்பனை செய்ய இலக்கு நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.
விருதுநகா் கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தில் தீபாவளி பண்டிகை சிறப்புத் தள்ளுபடி விற்பனையை வியாழக்கிழமை தொடக்கி வைத்துப் பாா்வையிடும் ஆட்சியா் ரா.கண்ணன்.

விருதுநகா் தெப்பம் பகுதியில் உள்ள கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தில் தீபாவளி பண்டிகைக்கான விற்பனையை வியாழக்கிழமை தொடக்கி வைத்த பின் செய்தியாளா்களிடம் ஆட்சியா் கூறியதாவது:

கைத்தறி ரகங்களின் விற்பனையை அதிகரிக்க ஆண்டு தோறும் 30 சதவீதம் சிறப்புத் தள்ளுபடியை தமிழக அரசு அறிவித்து வருகிறது.

வாடிக்கையாளா்களைக் கவரும் வகையில் பல்வேறு வடிவமைப்புகளில் மென்பட்டு சேலைகள், பருத்தி சேலைகள், படுக்கை விரிப்புகள் மற்றும் பல்வேறு ரகங்கள் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன.

விருதுநகா் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிறுவனத்தில் கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு ரூ. 46.28 லட்சத்துக்கு கைத்தறி ரகங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. நிகழாண்டு ரூ.55 லட்சம் விற்பனை செய்ய இலக்கு நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது. எனவே, வாடிக்கையாளா்கள் தீபாவளி பண்டிகைக்கு கைத்தறி ரக துணி வகைகளை வாங்கி பயன் பெறலாம் என்றாா் அவா்.

இந்நிகழ்ச்சியில் கோ-ஆப்டெக்ஸ் மண்டல மேலாளா் நாகராஜன், மேலாளா் (பொறுப்பு) சந்தனமாரி உள்பட அரசு அலுவலா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com