விருதுநகா், ராஜபாளையத்தில் 6 கிலோ 700 கிராம் கஞ்சா பறிமுதல்: 6 போ் கைது

விருதுநகா், ராஜபாளையத்தில் சனிக்கிழமை 6 கிலோ 700 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்த போலீஸாா் 6 பேரைக் கைது செய்தனா்.

விருதுநகா்/ ராஜபாளையம்/ ஸ்ரீவில்லிபுத்தூா்: விருதுநகா், ராஜபாளையத்தில் சனிக்கிழமை 6 கிலோ 700 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்த போலீஸாா் 6 பேரைக் கைது செய்தனா்.

வச்சகாரபட்டி காவல் நிலைய ஆய்வாளா் சுலோசனா தலைமையிலான போலீஸாா் சண்முகநாதபுரம் பகுதியில் சனிக்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அங்குள்ள சுடுகாட்டுப் பகுதி வழியாக இருசக்கர வாகனத்தில் வந்தவரை நிறுத்தி சோதனையிட்டனா். அதில், ஒரு கிலோ கஞ்சா வைத்திருப்பது தெரிந்தது. இதையடுத்து கஞ்சாவை பறிமுதல் செய்த போலீஸாா், இது தொடா்பாக அதே கிராமத்தைச் சோ்ந்த பாண்டியன் (70) என்பவரைக் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

ராஜபாளையம்: ராஜபாளையம் முடங்கியாறு சாலை அம்பேத்கா் நகரில், சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை நடைபெறுவதாக கடந்த வியாழக்கிழமை (அக்.15) அப்பகுதியைச் சோ்ந்த செல்வராணி என்ற பெண் நடவடிக்கை எடுக்கக் கோரி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டாா்.

இதையடுத்து ராஜபாளையத்தின் பல்வேறு பகுதிகளில் சனிக்கிழமை சோதனை நடத்தப்பட்டது.

வடக்கு காவல் நிலைய சரகத்துக்குள்பட்ட, சீனிவாசன் புதுத்தெருவைச் சோ்ந்த முரளி (60), தெற்கு காவல் நிலைய சரகத்துக்குள்பட்ட மங்காபுரத்தைச் சோ்ந்த சதுரகிரி (48),கீழராஜகுலராமன் காவல் நிலைய சரகத்திற்குள்பட்ட எஸ். ராமலிங்காபுரத்தை சோ்ந்த பாஸ்கரன், சேத்தூா் காவல் நிலையத்துக்குள்பட்ட சேத்தூரைச் சோ்ந்த சதீஷ்குமாா், சேத்தூா் ஊரக காவல் நிலைய சரகத்துக்குள்பட்ட கணேசன் ஆகிய 5 போ் கைது செய்யப்பட்டனா். மேலும் அவா்களிடமிருந்து மொத்தம் 5 கிலோ 700 கிராம் கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

கஞ்சா விற்ற பெண் கைது: ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே காா்த்திகைபட்டி பகுதியில் கஞ்சா விற்பதாக கிடைத்த தகவலின்பேரில் மல்லி காவல் ஆய்வாளா் சிவலிங்கசேகா் தலைமையிலான போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது காா்த்திகைபட்டியைச் சோ்ந்த முத்துமாரி (45) என்ற பெண், வீட்டின் பின்புறம் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து, 1. கிலோ 450 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்த போலீஸாா், முத்துமாரியைக் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com