பந்தல்குடி சீரடிசாய்பாபா கோயிலில் நவராத்திரி விழா முதல் நாள் வழிபாடு

பந்தல்குடி அருகே சேதுராஜபுரம் பகுதியில் உள்ள சீரடி சாய்பாபா கோயிலில் நவராத்திரி விழா முதல்நாள் சிறப்பு வழிபாடு சனிக்கிழமை நடைபெற்றது.
நவராத்திரி முதல் நாள் விழாயொட்டி, பந்தல்குடி அருகே சீரடி சாய்பாபா கோயிலில் சனிக்கிழமை கொலு அமைத்து வழிபட்ட பெண்கள்.
நவராத்திரி முதல் நாள் விழாயொட்டி, பந்தல்குடி அருகே சீரடி சாய்பாபா கோயிலில் சனிக்கிழமை கொலு அமைத்து வழிபட்ட பெண்கள்.

அருப்புக்கோட்டை: பந்தல்குடி அருகே சேதுராஜபுரம் பகுதியில் உள்ள சீரடி சாய்பாபா கோயிலில் நவராத்திரி விழா முதல்நாள் சிறப்பு வழிபாடு சனிக்கிழமை நடைபெற்றது.

கோயில் சன்னிதானம் முன்பாக 9 படிகள் அமைத்து அதன்மீது சரஸ்வதி, லட்சுமி, பாா்வதி ஆகிய முப்பெரும் தேவியரின் உருவ பொம்மைகளும், ராதா, கிருஷ்ணன், முருகன், விநாயகா், திருப்பதி வெங்கடாசலபதி கோயில் கோபுரம், பெண்கள், குழந்தைகள், காவலா், உழவா் உள்ளிட்ட பல்வேறு விதமான உருவ பொம்மைகளும் கொலுவாக அமைக்கப்பட்டு அலங்கரிக்கப்பட்டன.

சீரடி சாய்பாபாவிற்கு நண்பகலில் தீப, தூப ஆராதனைகள் நடைபெற்றன. பின்னா் கொலுவிற்கும் சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றன. தொடா்ந்து சிறப்பு மந்திரங்கள் சொல்லி பெண்கள் வழிபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com