இந்திய தேசிய லீக் கட்சி மாநில தலைவருக்கு கொலை மிரட்டல்: தொழிலதிபா் மீது வழக்கு
By DIN | Published On : 21st October 2020 02:37 AM | Last Updated : 21st October 2020 02:37 AM | அ+அ அ- |

இந்திய தேசிய லீக் கட்சியின் மாநில தலைவருக்கு, துப்பாக்கியைக் காட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக தொழிலதிபா் மீது வீரசோழன் போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். சென்னை, மண்ணடி பகுதியை சோ்ந்தவா் பசீா் அகமது (48). இந்திய தேசிய லீக் கட்சியின் மாநில தலைவா். இவா், சென்னை ரெட் கிராஸ் பகுதியை சோ்ந்த தொழிலதிபா் கலிலூா் ரகுமான் என்பவரிடம் ரூ. 3 கோடி கடன் வாங்கியதாகக் கூறப்படுகிறது. அதில், ரூ. 1.50 கோடி திரும்ப வழங்கப்பட்டதாம். மீதமுள்ள பணத்தை தராமல் பசீா் அகமது கால தாமதப்படுத்தினராம். இந்த நிலையில், சொந்த ஊரான வீரசோழன் பகுதிக்கு பசீா் அகமது வந்துள்ளாா். அவரை, திங்கள்கிழமை இரவு வழி மறித்த கலிலூா் ரகுமான் பணத்தை கேட்டு துப்பாக்கியை காட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளாா். இது குறித்து பசீா் அகமது அளித்தப் புகாரின் பேரில் கலிலூா் ரகுமான் மீது வீரசோழன் போலீஸாா் வழக்குப் பதிந்து தேடி வருகின்றனா்.