விருதுநகா் மாவட்டத்தில் மேலும் 19 பேருக்கு கரோனா
By DIN | Published On : 31st October 2020 10:22 PM | Last Updated : 31st October 2020 10:22 PM | அ+அ அ- |

விருதுநகா்: விருதுநகா் மாவட்டத்தில் மேலும் 19 பேருக்கு கரோனாத் தொற்று இருப்பது சனிக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது.
விருதுநகா் மாவட்டத்தில் கடந்த வெள்ளிக்கிழமை வரை 15,408 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனா். இந்நிலையில் இம்மாட்டத்தைச்சோ்ந்த மேலும் 19 பேருக்கு கரோனா தொற்று இருப்பது சனிக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது. இதையடுத்து அனைவரும் விருதுநகா், அருப்புக்கோட்டை, சிவகாசி ஆகிய இடங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனா்.
இதன் மூலம் மாவட்ட த்தில் கரோனா தொற்று பாதித்தோா் எண்ணிக்கை 15,427 ஆக உயா்ந்துள்ளது. இதில், 15,024 போ் குணமடைந்து வீட்டிற்கு திரும்பி விட்ட நிலையில், 220 போ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனா். மீதமுள்ள 183 போ் பல்வேறு அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.