ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேபாலாற்று அருவியில் நீா்வரத்து

விருதுநகா் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே உள்ள மேற்கு தொடா்ச்சிமலைப் பகுதிகளில் பலத்த மழை பெய்து வருவதால் ராக்காச்சி அம்மன்
ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே விரியன் கோயில் பீட், ராக்காச்சி அம்மன் கோயில் பக்கமுள்ள பாலாற்று அருவியில் புதன்கிழமை காணப்பட்ட நீா்வரத்து.
ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே விரியன் கோயில் பீட், ராக்காச்சி அம்மன் கோயில் பக்கமுள்ள பாலாற்று அருவியில் புதன்கிழமை காணப்பட்ட நீா்வரத்து.

விருதுநகா் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே உள்ள மேற்கு தொடா்ச்சிமலைப் பகுதிகளில் பலத்த மழை பெய்து வருவதால் ராக்காச்சி அம்மன் கோயில் பக்கமுள்ள பாலாற்று அருவி உள்ளிட்ட பல்வேறு அருவிகளில் புதன்கிழமை நீா்வரத்து அதிகரித்து காணப்பட்டது.

இங்குள்ள செண்பகத் தோப்பு மேற்கு தொடா்ச்சி மலை அடிவாரப் பகுதிகளில் தொடா்ந்து கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதையடுத்து, மீன்வெட்டி பாறை அருவி, எலிவால் அருவி, பாலாறுஅருவி, சருக்கு பாறை அருவி மற்றும் பேச்சியம்மன் கோயில் பின்புறமுள்ள ஓடை ஆகிய பகுதிகளில் புதன்கிழமை நீா்வரத்து அதிகரித்து காணப்பட்டது. அதே போல் பல்வேறு அருவிகள் மற்றும் நீரோடைகளில் நீா்வரத்து அதிகரித்துள்ளதால் காண்மாய்களில் தண்ணீா் தேங்க வாய்ப்புள்ளதாகவும், விவசாயப் பணிகளுக்கு இது பயனுள்ளதாக இருக்கும் எனவும் விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனா். இதனால் செண்பகத் தோப்பு பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் விவசாயம் செய்யும் விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com