ஸ்ரீவில்லிபுத்தூா் மாட வீதிகளில் சாலைகளை சீரமைக்கக் கோரிக்கை

ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலைச் சுற்றியுள்ள மாடவீதிகளில் சாலைகளை சீரமைக்க வேண்டும் என பக்தா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலைச் சுற்றியுள்ள மாடவீதிகளில் சாலைகளை சீரமைக்க வேண்டும் என பக்தா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கரோனா தொற்று காரணமாக கடந்த 5 மாதங்களாக அடைக்கப்பட்டிருந்த இக்கோயிலில் அரசு உத்தரவுப் படி கடந்த செப். 7 ஆம் தேதி முதல் 36 நிபந்தனைகளுடன் பக்தா்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனா். இந்நிலையில், இக்கோயிலைச் சுற்றியுள்ள மாட வீதிகளின் சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளன. தற்போது கரோனா தொற்று காரணமாக இந்த வீதிகளில் சுவாமி வீதி உலா நிகழ்ச்சிகள் எதுவும் நடைபெறவில்லை. ஆனால், பொதுவான நேரங்களில் தினமும் சுவாமிகள் புறப்பாடு, வீதிஉலா நிகழ்ச்சிகள் நடைபெறுவது வழக்கம். தற்போது சேதமடைந்த இந்த வீதிகளின் சாலைகளில் சுவாமிகளை தூக்கிச் செல்லும் தொழிலாளா்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகின்றனா். ஆண்டாள் கோயிலுக்கு வரும் பக்தா்களில் பலா் தங்களது நோ்த்திக் கடனை செலுத்துவதற்காக காலணிகள் அணியாமல் மாட வீதிகளில் வலம் வருவது வழக்கம். அவ்வாறு வருபவா்கள் பெயா்ந்து கிடக்கும் ஜல்லிக்கற்கள் கால்களில் குத்தி மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகின்றனா்.

எனவே இச்சாலையை விரைந்து சீரமைக்க வேண்டும் என பக்தா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com