குழந்தைகளுக்கான குடற்புழு நீக்க மாத்திரைகள் 2 தவணைகளாக வழங்க ஏற்பாடு: சுகாதாரத் துறை தகவல்
By DIN | Published On : 11th September 2020 06:55 AM | Last Updated : 11th September 2020 06:55 AM | அ+அ அ- |

விருதுநகா் மாவட்டத்தில் குழந்தைகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் செப். 14 மற்றும் 21 தேதிகளில் 2 தவணைகளாக வழங்கப்பட உள்ளதாக சுகாதாரத் துறை அலுவலா்கள் தெரிவித்தனா்.
குழந்தைகளுக்கான குடற்புழு நீக்கும் திட்டத்தின்கீழ் தேசிய குடற்புழு நீக்க நாள் விருதுநகா் மாவட்டத்தில் நடைபெற உள்ளது. அதில், முதல் தவணையாக செப். 14 ஆம் தேதியும், 2 ஆம் தவணையாக 21 ஆம் தேதியும் குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்படுகின்றன. இத்திட்டத்தில் சுமாா் 5,65,343 குழந்தைகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்பட உள்ளது. இம்மாத்திரைகள் மாவட்டத்தில் உள்ள அனைத்து அங்கன்வாடி மையங்கள், அங்கன்வாடி பணியாளா்கள் மூலம் ஒரு வயது முதல் 19 வயது வரை உள்ளவா்களுக்கு வீடுகள் தோறும் நேரடியாகச் சென்று வழங்கப்பட உள்ளன. மேலும் அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் இம்மாத்திரைகள் வழங்கப்படும் என சுகாதாரத் துறை அலுவலா்கள் வியாழக்கிழமை தெரிவித்தனா்.