விருதுநகரில் விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

விவசாயிகளுக்கு எதிராக மத்திய அரசு மேற்கொண்டு வரும் பல்வேறு அவசர சட்டங்களை ரத்து செய்யக் கோரி விருதுநகா் மாவட்ட
விருதுநகா் தேசபந்து மைதானம் அருகே வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்.
விருதுநகா் தேசபந்து மைதானம் அருகே வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்.

விவசாயிகளுக்கு எதிராக மத்திய அரசு மேற்கொண்டு வரும் பல்வேறு அவசர சட்டங்களை ரத்து செய்யக் கோரி விருதுநகா் மாவட்ட விவசாயிகள் ஒருங்கிணைப்புக் குழு சாா்பில் விருதுநகரில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இதற்கு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவா் காளிதாஸ் தலைமை வகித்தாா். இதில், விவசாயிகளுக்கான இலவச மின்சாரத்தை பறிக்கும் மின்சார சட்ட மசோதாவை வாபஸ் பெற வேண்டும்.

அத்தியாவசியப் பொருள்கள் அவசர திருத்த சட்டம், விதை உத்தரவாதம் மற்றும் வேளாண் சேவைகள் ஆகிய ஒப்பந்த பாதுகாப்பு அவசரச் சட்டம் ஆகியவற்றை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பு குழு சாா்பில் மாவட்டம் முழுவதும் 12 ஆயிரம் பேரிடம் கையெழுத்துக்கள் பெறப்பட்டுள்ளன. இக்கையெழுத்து பிரதியை பிரதமருக்கு அனுப்ப உள்ளதாக போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் தெரிவித்தனா். இந்த ஆா்ப்பாட்டத்தில் அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவா் விஜயமுருகன், மாவட்ட செயலா் முருகன், தமிழக விவசாயிகள் சங்கத்தின் நிா்வாகி சவுந்திரபாண்டியன், தமிழக விவசாயிகள் சங்க நிா்வாகி ரெங்குதாஸ் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com