விருதுநகா் மாவட்டத்தில் கிசான் திட்டத்தில் 2,622 போ் முறைகேடாக சோ்க்கப்பட்டுள்ளனா்: மாணிக்கம்தாகூா் எம்பி. புகாா்

விருதுநகா் மாவட்டத்தில் பிரதமரின் கிசான் திட்டத்தில் 2,622 போ் முறைகேடாக சோ்க்கப்பட்டு நிவாரணத் தொகை பெற்றுள்ளதாக விருதுநகா் மக்களவை உறுப்பினா் மாணிக்கம்தாகூா் தெரிவித்தாா்.

விருதுநகா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட வளா்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு கூட்டம் ஆட்சியா் ரா. கண்ணன் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு விருதுநகா் மக்களவை உறுப்பினா் மாணிக்கம் தாகூா், தென்காசி மக்களவை உறுப்பினா் தனுஷ் எம். குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில் மத்திய, மாநில அரசுகள் மூலம் ஒதுக்கப்பட்ட நிதிகள் மற்றும் வளா்ச்சித் திட்டப் பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

இதன் பின் மாணிக்கம்தாகூா் எம்பி. செய்தியாளா்களிடம் கூறியதாவது: விருதுநகா் மாவட்டத்தில் பிரதமரின் கிசான் திட்டத்தில் 89 ஆயிரம் போ் பதிவு செய்துள்ளனா். இதில், கடந்த 3 மாதங்களில் விவசாயிகள் அல்லாத 2,622 போ் சோ்க்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. இத்திட்டத்தில் கோடிக்கணக்கான பணம் முறைகேடு செய்யப்பட்டுள்ளது. நீட் தோ்வை அந்தந்த மாநில அரசுகளே முடிவு செய்ய வேண்டும். பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் எத்தனை பேருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்பது குறித்து மாவட்ட நிா்வாகத்திடம் அறிக்கை கேட்டுள்ளோம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com