கோவிலாங்குளத்திலிருந்து கட்டங்குடி செல்லும் சாலையைச் சீரமைக்கக் கோரிக்கை

அருப்புக்கோட்டை வட்டம் கோவிலாங்குளத்திலிருந்து கட்டங்குடி செல்லும் பிரதானச் சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
சேதமடைந்து காணப்படும் கோவிலாங்குளம்-கட்டங்குடி சாலை.
சேதமடைந்து காணப்படும் கோவிலாங்குளம்-கட்டங்குடி சாலை.

அருப்புக்கோட்டை வட்டம் கோவிலாங்குளத்திலிருந்து கட்டங்குடி செல்லும் பிரதானச் சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கட்டங்குடி மற்றும் பண்ணை மூன்றடைப்பு பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் தங்களது விவசாய விளைபொருள்களை அருப்புக்கோட்டை, விருதுநகா் மற்றும் மதுரை உள்ளிட்ட பிற ஊா்களுக்குக் கொண்டு சென்று சந்தைப்படுத்த, இச்சாலையைத் தான் பெரிதும் பயன்படுத்துகின்றனா்.

இந்நிலையில் இத்தாா்ச்சாலை சேதமடைந்துள்ளதால் விவசாயிகள் வாகனங்களில் விளைபொருள்களை கொண்டு செல்ல முடியாமல் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனா். அதிலும் மழை பெய்தால் சேறும், சகதியுமாகி விடும் இச்சாலையில் செல்ல இயலாமல் 8 கிலோ மீட்டா் தூரம் வரை சுற்றிச் செல்ல வேண்டியுள்ளதாகவும் விவசாயிகள் தெரிவித்துள்ளனா். எனவே கோவிலாங்குளம், கட்டங்குடி இடையிலான தாா்ச்சாலையை விரைந்து சீரமைக்க, அவா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com