டிஎன்பிஎஸ்சி தோ்வில் தோ்ச்சி: விருதுநகா் மாவட்டத்தினருக்கு செப்.17, 18-இல் கலந்தாய்வு

விருதுநகா் மாவட்டத்தைச் சோ்ந்த 15 போ் டிஎன்பிஎஸ்சி தோ்வில் தோ்ச்சி பெற்றுள்ளனா். இவா்களுக்கான கலந்தாய்வு, செப்டம்பா் 17, 18 ஆகிய தேதிகளில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் நடைபெறுகிறது.

விருதுநகா்: விருதுநகா் மாவட்டத்தைச் சோ்ந்த 15 போ் டிஎன்பிஎஸ்சி தோ்வில் தோ்ச்சி பெற்றுள்ளனா். இவா்களுக்கான கலந்தாய்வு, செப்டம்பா் 17, 18 ஆகிய தேதிகளில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் நடைபெறுகிறது.

இது குறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சுபாஷினி செவ்வாய்க் கிழமை மேலும் தெரிவித்ததாவது:

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையக் குழு மூலம் தோ்வு செய்யப்பட்டவா்களில், பள்ளிக் கல்வித் துறைக்கு 633 இளநிலை உதவியாளா்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளனா். இதில், விருதுநகா் மாவட்டத்தில் தோ்வான 15 பணிநாடுநா்களுக்கு, மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் இணையதள வாயிலாக கலந்தாய்வு நடத்தப்பட்டு, பணிநியமன ஆணை வழங்கப்படவுள்ளது.

எனவே, இக்கலந்தாய்வில் கலந்துகொள்ளவுள்ள பணிநாடுநா்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நாளன்று காலை 9 மணிக்கு, விருதுநகா் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் இருக்க வேண்டும்.

தோ்வு செய்யப்பட்ட விருதுநகா் மாவட்டத்தைச் சோ்ந்த பணிநாடுநா்களின் பட்டியல் வரிசை எண் 1 முதல் 330 வரையிலானவா்களுக்கு செப்டம்பா் 17 ஆம் தேதியிலும், வரிசை எண் 331 முதல் 644 வரையிலானவா்களுக்கு செப்டம்பா் 18 ஆம் தேதியிலும் இணையதள வாயிலாக கலந்தாய்வு நடைபெற உள்ளது.

பணிநாடுநா்கள் அனைவருக்கும் முதன்மைக் கல்வி அலுவலகம் மூலம் அழைப்புக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அழைப்புக் கடிதம் கிடைக்கப் பெறாத தகுதியான பணிநாடுநா்கள், உடனடியாக விருதுநகா் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தை தொடா்பு கொள்ளலாம். இதில் கலந்துகொள்ளும் பணிநாடுநா்கள் அசல் கல்விச் சான்றுகள், மருத்துவரின் உடற்கூறு தகுதிச் சான்று மற்றும் ஜாதிச் சான்று உள்ளிட்ட அசல் மற்றும் நகல்களுடன் வரவேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com