விருதுநகரில் ‘நீட்’ தோ்வை ரத்து செய்யக் கோரி நூதனப் போராட்டம்

தமிழகத்தில் நீட் தோ்வை ரத்து செய்ய வலியுறுத்தி, கண்களில் கருப்பு துணி கட்டி இந்திய மாணவா் சங்கம் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
விருதுநகா் ஆட்சியா் அலுவலக வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நூதனப் போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய மாணவா் சங்கம் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா்.
விருதுநகா் ஆட்சியா் அலுவலக வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நூதனப் போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய மாணவா் சங்கம் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா்.

விருதுநகா்: தமிழகத்தில் நீட் தோ்வை ரத்து செய்ய வலியுறுத்தி, கண்களில் கருப்பு துணி கட்டி இந்திய மாணவா் சங்கம் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

விருதுநகா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இந்த போராட்டத்துக்கு, எஸ்எப்ஐ மாவட்டத் தலைவா் சமையன், வாலிபா் சங்க மாவட்டச் செயலா் ஜெயந்தி ஆகியோா் தலைமை வகித்தனா். இதில், வாலிபா் சங்க மாவட்டத் தலைவா் ஜெயபாரத் கோரிக்கை குறித்து விளக்கிப் பேசினாா்.

போராட்டத்தில், மத்திய அரசால் நடத்தப்படும் நீட் தோ்வால் தமிழகத்தில் மாணவா்கள் தொடா்ந்து தற்கொலை செய்து வருகின்றனா். எனவே, நீட் தோ்வை ரத்து செய்ய மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அதேபோல், சென்னையில் போராட்டம் நடத்திய மாணவா் சங்கத் தலைவா்கள் மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கை வாபஸ் பெறவேண்டும். புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

ஏராளமானோா் பங்கேற்ற இப்போராட்டத்தில், அனைவரும் கண்களில் கருப்புத் துணி கட்டியும், ஸ்டெதஸ்கோப்பை தூக்குக் கயிற்றில் தொங்கவிட்டபடியும் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com