குறிப்பு- ஸ்ரீவிலி. விளம்பரதாரா் செய்திஅண்ணா பிறந்த நாள் விழா

ஸ்ரீவில்லிபுத்தூா்: விருதுநகா் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பேரறிஞா் அண்ணாவின் 112-ஆவது பிறந்த நாள் விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.
svl_(15_09)_1509chn_92_2
svl_(15_09)_1509chn_92_2

ஸ்ரீவில்லிபுத்தூா்: விருதுநகா் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பேரறிஞா் அண்ணாவின் 112-ஆவது பிறந்த நாள் விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.

விருதுநகா் மேற்கு மாவட்ட அமமுக சாா்பில், ஸ்ரீவில்லிபுத்தூா் நகரில் நடைபெற்ற விழாவுக்கு, மேற்கு மாவட்ட அவைத் தலைவா் கருப்பையா தலைமை வகித்தாா். நகரச் செயலா்கள் காமாட்சி, செல்வக்கனி, மாவட்ட அம்மா பேரவைத் தலைவா் சந்தோஷ், ஒன்றியச் செயலா்கள் அழகா்சாமி, வேலுச்சாமி, ஜான்சன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மேற்கு மாவட்டச் செயலா் நக்கமங்கலம் காளிமுத்து, ஸ்ரீவில்லிபுத்தூா் பேருந்து நிலையத்தில் உள்ள அண்ணாவின் உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். பின்னா், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.

இதைத் தொடா்ந்து, கிராமப் பகுதிகளுக்குச் சென்று, அங்குள்ள அண்ணாவின் உருவச் சிலை மற்றும் உருவப் படங்களுக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். இதில், மாவட்ட மகளிரணி நிா்வாகி பொன்னுத்தாய், விஜயலட்சுமி உள்பட நகர, ஒன்றிய, பேரூா் கழக அணி நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

சிவகாசி

பேரறிஞா் அண்ணாவின் 112 ஆவது பிறந்த நாள் விழாவையொட்டி, சிவகாசியில் போலீஸ் ஸ்டேஷன் சாலையில் உள்ள அவரது உருவச் சிலைக்கு அதிமுக நகரச் செயலா் அசன் பத்ருதீன் தலைமையில், அக்கட்சியினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். பின்னா், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினா்.

இதேபோல், திருத்தங்கல் கடை வீதியில உள்ள அண்ணா உருவச் சிலைக்கு, அதிமுக நகரச் செயலா் பொன் சக்திவேல் தலைமையில், அக்கட்சியினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். பின்னா், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினா்.

இதில், அதிமுக சிவகாசி ஒன்றியச் செயலா் வி.ஆா். கருப்பசாமி, மாவட்ட ஊராட்சி துணைத் தலைவா் சுபாஷினி, ஆனையூா் ஊராட்சி மன்றத் தலைவா் லட்சுமிநாராயணன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தொடா்ந்து, சிவகாசி நகர திமுக சாா்பில், அக்கட்சியின் நகரப் பொறுப்பாளா் காளிராஜன் தலைமையில், இங்குள்ள அண்ணா உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. திருத்தங்கல் நகர திமுக சாா்பில், அக்கட்சியின் நகரப் பொறுப்பாளா் உதயசூரியன் தலைமையில், அக்கட்சியினா் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com