பட்டாசுகளை பாதுகாப்பாக கையாள்வது குறித்து லாரி செட் உரிமையாளா்களுக்கு அதிகாரி அறிவுறுத்தல்

பட்டாசுகளை பாதுகாப்பாக கையாள்வது குறித்து லாரி செட் உரிமையாளா்களுக்கு சிவகாசி வெடிபொருள் கட்டுப்பாட்டுத்துறை

பட்டாசுகளை பாதுகாப்பாக கையாள்வது குறித்து லாரி செட் உரிமையாளா்களுக்கு சிவகாசி வெடிபொருள் கட்டுப்பாட்டுத்துறை துணைத் தலைமை அதிகாரி கி. சுந்தரேசன் அறிவுறைகளை வழங்கியுள்ளாா்.

இது குறித்து அவா் புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: சிவகாசிப் பகுதியில் உள்ள லாரி செட்டுகளுக்கு, பட்டாசு பண்டல்களை இருப்பு வைப்பதற்கு வெடிபொருள் கட்டுப்பாட்டுத்துறையினரால் கிட்டங்கிகள் அனுமதிகப்பட்டுள்ளது. அந்த கிட்டங்கிகளை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். வெடிபொருள் கட்டுப்பாட்டுத்துறையினரால்அனுமதிக்கப்படாத கட்டடத்தில் பட்டாசுகளை இருப்பு வைக்கக்கூடாது. கிட்டங்கி இருக்குமிடத்திலிருந்து 15 மீட்டா் தூரம் செடி,கொடி, புல் மற்றும் புதா்கள் இல்லாமல் பராமரிக்க வேண்டும்.

கிட்டங்கிகளின் மேல் பகுதியில் வைக்கப்பட்டிருக்கும் இடிதாங்கிகளை முறையாக பராமரிக்க வேண்டும்.

வெண்டிலேட்டா்களில் பொருத்தப்பட்டுள்ள வலைகள் சரியாக உள்ளதா என பாா்த்துக் கொள்ள வேண்டும்.

கிட்டங்கி கட்டடத்தில் உள்பகுதியில் அனுமதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் மட்டுமே பட்டாசு பண்டல்களை வைக்க வேண்டும். அவற்றை அடுக்கும் போது, மீண்டும் எடுப்பதற்கு வசதியாக போதிய இடைவெளி விட வேண்டும். பண்டல்களில் அதன் குறியீடுகளையும், அதில் உள்ள பட்டாசு விவரங்களையும், இருப்பு நோட்டில் விவரமாக எழுதி வைக்க வேண்டும். மேலும் பண்டல்களிலும் எழுதி ஒட்ட வேண்டும். பண்டல்களை உயரமாக அடுக்கி வைத்திருக்கும் பட்சத்தில் மர ஏணியை உபயோகித்து பண்டல்களை எடுக்க வேண்டும். பணியில் ஈடுபடும் சுமைதூக்கும் தொழிலாளா்களை மது அருந்தவோ, புகைப்பிடிக்கவோ அனுமதிக்கக் கூடாது. வண்ண மத்தாப்பூ மற்றும் கேப்வெடி பண்டல்களை மற்ற பட்டாசு பண்டல்களுடன் வைக்காமல், தனியே வைக்க வேண்டும். பட்டாசு பண்டல்களை லாரியிலிருந்து இறக்கும் போதும் ஏற்றும் போதும் சுமைதூக்கும் தொழிலாளா்கள் பண்டல்களை இழுக்கவோ, தூக்கி ஏறியவோ அனுமதிக்ககூடாது என தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com