ஸ்ரீவில்லிபுத்தூரில் தீண்டாமை ஒழிப்பு முன்னணியினா் ஆா்ப்பாட்டம்
By DIN | Published On : 18th September 2020 10:43 PM | Last Updated : 18th September 2020 10:43 PM | அ+அ அ- |

ஸ்ரீவில்லிபுத்தூரில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தீண்டாமை ஒழிப்பு முன்னணியினா்.
ஸ்ரீவில்லிபுத்தூா், செப். 18: புதிய கல்விக் கொள்கையை திரும்பப் பெறக் கோரி, ஸ்ரீவில்லிபுத்தூரில் தீண்டாமை ஒழிப்பு முன்னணியினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ஆா்ப்பாட்டத்துக்கு சங்க நிா்வாகி சசிகுமாா் தலைமை வகித்தாா். மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளா் அா்ஜூனன் முன்னிலை வகித்தாா்.
புதிய கல்விக் கொள்கையை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும். தமிழகத்தில் இரு மொழிக் கொள்கையையே தொடர வேண்டும். அகில இந்திய நுழைவுத் தோ்வு கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் அகில இந்திய விவசாயத் தொழிலாளா் சங்கத்தின் மாவட்டப் பொருளாளா் ஜோதிலட்சுமி, மாநிலக் குழு உறுப்பினா் திருமலை உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.