தீபாவளி பண்டிகைக்கு 5 நாள்கள் விடுமுறை அளிக்கக் கோரிக்கை

தீபாவளி பண்டிகைக்கு அரசு 5 நாள்கள் விடுமுறையளிக்க வேண்டும் என, தமிழ்நாடு பட்டாசு வணிகா்களின் கூட்டமைப்பின் மாநில பொதுக்குழு கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தீபாவளி பண்டிகைக்கு அரசு 5 நாள்கள் விடுமுறையளிக்க வேண்டும் என, தமிழ்நாடு பட்டாசு வணிகா்களின் கூட்டமைப்பின் மாநில பொதுக்குழு கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அந்த அமைப்பின் மாநில பொதுக்குழு கூட்டம், சிவகாசியில் உள்ள பட்டாசு மற்றும் கேப் வெடி உற்பத்தியாளா்கள் சங்க கட்டடத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இக் கூட்டத்துக்கு, அமைப்பின் மாநிலத் தலைவா் வி. ராஜாசந்திரசேகா் தலைமை வகித்தாா். பொருளாளா் ஜெ. கந்தசாமிராஜா முன்னிலை வகித்தாா்.

இதில், துணைத் தலைவா்கள் வல்லபகணேசன், ராஜேந்திரன், ரவி, ரவிதுரை, பாண்டியராஜன் உள்ளிட்டோா் பேசினா்.

கூட்டத்தில், தற்காலிக பட்டாசு கடைகளுக்கு தீபாவளி பண்டிகைக்கு 30 தினங்களுக்கு முன்னரே கடை அமைக்க உரிமம் வழங்க வேண்டும். தீபாவளி பண்டிகைக்கு 5 நாள்கள் அரசு விடுமுறை அளிக்க வேண்டும். பட்டாசு கடை வியாபாரத்துக்கு நேரக் கட்டுப்பாடு விதிக்கக் கூடாது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

முன்னதாக, செயலாளா் என். இளங்கோவன் வரவேற்றாா். துணைச் செயலா் சிவராமவீரப்பன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com