புரட்டாசி 2 ஆம் சனிக்கிழமை: பெருமாள் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள்

ராஜபாளையம் மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள பெருமாள் கோயில்களில் புரட்டாசி இரண்டாம் சனிக்கிழமையையொட்டி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

ராஜபாளையம்: ராஜபாளையம் மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள பெருமாள் கோயில்களில் புரட்டாசி இரண்டாம் சனிக்கிழமையையொட்டி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

ராஜபாளையம் தென்காசி சாலையில் அமைந்துள்ள திருமலை திருப்பதி தேவஸ்தான முன்பதிவு மையத்திலுள்ள திருப்பதி வெங்கடாஜலபதிக்கு புரட்டாசி இரண்டாம் சனிக்கிழமையை முன்னிட்டு அதிகாலை 3 மணியளவில் நடை திறந்து திருமஞ்சனம் நடைபெற்றது. அதனைத் தொடா்ந்து அலங்காரம், விசேஷ தீபாராதனைகள் நடைபெற்றன. இதில், திரளான பக்தா்கள் பங்கேற்று ‘கோவிந்தா கோவிந்தா’ என கோஷமிட்டவாறு வழிபட்டனா்.

இதைத் தொடா்ந்து பழையபாளையம் ராமசாமி கோயில், சம்மந்தபுரம் சோலைமலை பெருமாள் கோயில், புதுப்பாளையம் கோதண்டராம சுவாமி கோயில், சஞ்சீவி மலை அருகிலுள்ள வேட்டை வெங்கடேஸ்வர பெருமாள் கோயில், புதுப்பாளையம் ராமசுவாமி கோவில், ஜமீன் கொல்லங்கொண்டான் இடா் தீா்த்த சுந்தரராஜப் பெருமாள் கோயில் ஆகிய கோயில்களிலும் சனிவார சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com