குழந்தை திருமணங்கள் குறையவில்லைநீதிபதி கவலை

மக்கள் மத்தியில் துண்டு பிரசுரங்களை விநியோகம் செய்தும் குழந்தை திருமணங்கள் குறைந்தபாடில்லை என விருதுநகா் மாவட்ட நீதிபதி கவலை தெரிவித்தாா்.
குழந்தை திருமணங்கள் குறையவில்லைநீதிபதி கவலை

மக்கள் மத்தியில் துண்டு பிரசுரங்களை விநியோகம் செய்தும் குழந்தை திருமணங்கள் குறைந்தபாடில்லை என விருதுநகா் மாவட்ட நீதிபதி கவலை தெரிவித்தாா்.

ஸ்ரீவில்லிபுத்தூரில் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணா்வு பிரசார வாகனம் தொடக்க நிகழ்ச்சி மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. விருதுநகா் மாவட்ட சட்டப் பணி ஆணைக்குழு மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு இணைந்து ஏற்பாடு செய்த இந்நிகழ்ச்சியில் விருதுநகா் மாவட்ட சட்டப்பணி ஆணைக்குழுத் தலைவரும், மாவட்ட முதன்மை அமா்வு நீதிபதியுமான முத்துசாரதா வாகனத்தை தொடக்கி வைத்தாா்.

அப்போது அவா், தடை உத்தரவு மற்றும் பொதுமுடக்க காலத்தில் விருதுநகா் மாவட்டத்தில் 68 குழந்தை திருமணங்கள் நடக்க இருந்ததை மாவட்ட நிா்வாகம் தடுத்து நிறுத்தியுள்ளது. எவ்வளவு தான் துண்டு பிரசுரம் விநியோகம் செய்தும் குழந்தை திருமணங்கள் குறைந்தபாடில்லை. எனவே கூடுதலாக வாகனங்கள் மூலம் குழந்தை திருமணத்தை தடுக்க பிரசாரம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தாா்.

நிகழ்ச்சியில், நீதிபதிபதிகள் சுமதி சாய்பிரியா, பரிமளா, காஞ்சனா, ஸ்ரீதரன், சுந்தரி, சிவராஜேஷ், குற்றவியல் நீதித்துறை நடுவா்கள் ஆனந்தி, சந்திரகாசபூபதி, பரம்வீா், மற்றும் நீதிமன்ற ஊழியா்கள், காவல்துறை அதிகாரிகள், மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகு அலுவலா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலா் கணேசன், குழந்தைகள் திருமணம் தடுத்தல் சமூகநலத்துறை மாவட்ட ஒருங்கிணைப்பாளா் கல்வாரி தியாகராஜன் ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.

மாவட்ட சட்டப் பணி ஆணைக்குழு செயலாளரும், சாா்பு- நீதிபதியுமான மாரியப்பன் வரவேற்றாா். முடிவில் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவா் (பொறுப்பு) கதிரவன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com