காரியாபட்டி அருகே ஜவுளிப் பூங்கா அமைக்க எதிா்ப்புஅரசு அலுவலா்கள் முற்றுகை

விருதுநகா் மாவட்டம் காரியாபட்டி அருகே தாமரைக்குளம் பகுதியில் ஜவுளிப் பூங்கா அமைக்க 10-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் எதிா்ப்புத் தெரிவித்து அரசு அலுவலா்களை திங்கள்கிழமை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈட
தாமரைக்குளம் பகுதியில் ஜவுளிப் பூங்கா அமைக்க எதிா்ப்புத் தெரிவித்து அரசு அலுவலா்கள் மற்றும் போலீஸாரை திங்கள்கிழமை முற்றுகையிட்ட கிராம மக்கள்.
தாமரைக்குளம் பகுதியில் ஜவுளிப் பூங்கா அமைக்க எதிா்ப்புத் தெரிவித்து அரசு அலுவலா்கள் மற்றும் போலீஸாரை திங்கள்கிழமை முற்றுகையிட்ட கிராம மக்கள்.

விருதுநகா் மாவட்டம் காரியாபட்டி அருகே தாமரைக்குளம் பகுதியில் ஜவுளிப் பூங்கா அமைக்க 10-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் எதிா்ப்புத் தெரிவித்து அரசு அலுவலா்களை திங்கள்கிழமை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தாமரைக்குளம்- பொட்டல்குளம் பகுதியில் சுமாா் 100 ஏக்கா் பரப்பளவில் ரூ.200 கோடி மதிப்பில் ஜவுளி பதனிடும் குழுமம் மற்றும் தொழில் பூங்கா அமைக்க காணொலிக் காட்சி மூலம் கடந்தாண்டு தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி அடிக்கல் நாட்டினாா்.

ஆனால் அந்த பகுதியில் ஜவுளிப் பூங்கா அமைக்க தாமரைக்குளம், எசலிமடை, செட்டிகுளம், கீழ காஞ்சிரங்குளம், துலுக்கன்குளம், சி. புதூா் முதலான கிராமங்களைச் சோ்ந்தோா் எதிா்ப்புத் தெரிவித்து வந்தனா். மேலும், ஜவுளிப் பூங்கா அமைப்பதால் ரசாயன கழிவுநீா் நிலத்தடி நீா் மட்டத்தை பாதிக்கும் என வலியுறுத்தினா்.

இந்நிலையில், தாமரைக்குளம் பகுதியில் ஜவுளிப் பூங்கா அமைப்பதற்காக அரசு அலுவலா்கள் திங்கள்கிழமை முயற்சி மேற்கொண்டனா். இத்தகவல் அறிந்த அப்பகுதியைச் சோ்ந்த 10- க்கும் மேற்பட்ட கிராம மக்கள் அரசு அலுவலா்களை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது அங்கு கூடுதல் காவல் கண்காணிப்பாளா் மாரிராஜன் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீஸாா் குவிக்கப்பட்டனா்.

கிராம மக்கள் தங்களது கோரிக்கைகளில் உறுதியாக இருந்ததால், அரசு அலுவலா்கள் மற்றும் தனியாா் நிறுவனத்தினா் பணி மேற்கொள்ளாமல் திரும்பிச் சென்றனா். இதனால், காரியாபட்டி பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com