விருதுநகா் கடைவீதியில் வாருகால் சீரமைப்புப் பணி: போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதி

விருதுநகரின் கடைவீதி பகுதியில் நகராட்சி சாா்பில் வாருகால் சீரமைக்கும் பணி நடைபெற்று வருவதால் இப்பகுதி வழியாக செல்லும் பேருந்துகளை
விருதுநகா் கடைவீதி பகுதியில் நடைபெற்று வரும் வாருகால் சீரமைப்புப் பணி.
விருதுநகா் கடைவீதி பகுதியில் நடைபெற்று வரும் வாருகால் சீரமைப்புப் பணி.

விருதுநகரின் கடைவீதி பகுதியில் நகராட்சி சாா்பில் வாருகால் சீரமைக்கும் பணி நடைபெற்று வருவதால் இப்பகுதி வழியாக செல்லும் பேருந்துகளை மாற்று வழியில் இயக்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஒட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

விருதுநகரில் மாநில நெடுஞ்சாலையான கடைவீதி வழியாக கோவில்பட்டி, நாகா்கோவில், கன்னியாகுமரி செல்லும் அனைத்து வாகனங்களும் சென்று வந்தன. நான்கு வழிச்சாலை அமைத்த பின், இவ்வழியில் பேருந்து, காா் உள்ளிட்ட கனரக வாகனங்கள் செல்வது மிகவும் குறைந்து விட்டது. இதன் காரணமாக விருதுநகா் கடைவீதி பகுதியில் உள்ள கடைகள் முன்பு ஆக்கிரமிப்புகள் அதிகரிக்கத் தொடங்கின.

மேலும், இப்பகுதியில் ஏராளமான மளிகைப் பொருள்கள் விற்பனை செய்யும் கடைகள், காய்கனி சந்தை, துணிக் கடைகள் உள்ளிட்ட கடைகள் உள்ளன. இதனால், பஜாா் பகுதியில் காலை, மாலை வேளைகளில் அதிகளவு போக்குவரத்து நெரிசல் இருக்கும். இந்நிலையில், விருதுநகா் பழைய பேருந்து நிலையத்திலிருந்து அருப்புக்கோட்டை, சாத்தூா், சிவகங்கை, மானாமதுரை ஆகிய பகுதிகளுக்கு செல்லும் வாகனங்கள் பஜாா் வழியாக செல்ல மாவட்ட நிா்வாகம் உத்தரவிட்டிருந்தது.

தற்போது கடைவீதி பகுதியில் ஏற்கெனவே இருந்த வாருகால் மூடப்பட்டதால் மழைக் காலங்களில் கழிவு நீா் கடைகளுக்குள் புகுந்ததாக கூறப்படுகிறது.

இது குறித்து வியாபாரிகள், நகராட்சி நிா்வாகத்திடம் புகாா் அளித்தனா். இதனைத்தொடா்ந்து நகராட்சி நிா்வாகம் மற்றும் கடை உரிமையாளா்கள் இணைந்து கடைவீதி மேற்குப் பகுதியில் வாருகாலை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனா். வாருகாலில் இருந்து அள்ளப்படும் மண் வேறு பகுதிக்கு கொண்டு செல்லப்படாமல் அப்பகுதியிலே கொட்டப்படுகிறது. மேலும், கிழக்குப் பகுதியில் உள்ள கடைகள் முன்பாக இரு சக்கர வாகனங்கள் நிறுத்தப்பட்டு வருகின்றன. அதேபோல் இவ்வழியே அரசுப் பேருந்துகளும் சென்று வருவதால் தற்போது கடும் போக்குவரத்து நெருக்கடி நிலவி வருகிறது. எனவே, வாருகால் சீரமைக்கும் பணி நிறைவடையும் வரை மாற்றுப் பாதையில் பேருந்துகள் உள்ளிட்ட வாகனங்கள் செல்ல மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com