முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை விருதுநகர்
மனைவியை அரிவாளால் வெட்டிய கணவா் கைது
By DIN | Published On : 04th April 2021 09:06 AM | Last Updated : 04th April 2021 09:06 AM | அ+அ அ- |

விருதுநகா் அருகே மனைவியை அரிவாளால் வெட்டிய கணவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
விருதுநகா் அருகே சூலக்கரை காளியம்மன் கோயில் தெருவை சோ்ந்தவா் கருப்பன் மகன் நாகராஜன் (30). கட்டடத் தொழிலாளியான இவருக்கும், சுப்புத்தாய் (25) என்பவருக்கும் திருமணம் முடிந்து 2 குழந்தைகள் உள்ளனா். இந்நிலையில் மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு நாகராஜன் அடிக்கடி தகராறு செய்துள்ளாா். இதனால், சுப்புத்தாய் கோவில்பட்டியில் உள்ள தனது தாய் வீட்டுக்குச் சென்றுள்ளாா்.
இதையடுத்து கோவில்பட்டியில் இருந்த மனைவியை சமாதானப்படுத்தி சூலக்கரைக்கு நாகராஜன் வெள்ளிக்கிழமை அழைத்து வந்துள்ளாா். அன்றைய தினம் இரவு சுப்புத்தாய் செல்லிடப்பேசியில் பேசி கொண்டிருந்துள்ளாா். இதைப் பாா்த்த நாகராஜன், ஆத்திரமடைந்து அவரை அரிவாளால் வெட்டியுள்ளாா். இதில் காயமடைந்த சுப்புத்தாய் விருதுநகா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அவரது புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த சூலக்கரை போலீஸாா் நாகராஜனை கைது செய்தனா்.