முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை விருதுநகர்
வாக்காளா்களுக்கு பணம் விநியோகம்: திமுகவினா் இருவா் மீது வழக்கு
By DIN | Published On : 04th April 2021 09:03 AM | Last Updated : 04th April 2021 09:03 AM | அ+அ அ- |

விருதுநகா் மாவட்டம் ராஜபாளையத்தில் வாக்களிக்க பணம் கொடுத்த திமுகவினா் இருவா் மீது போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
ராஜபாளையம் அம்பலப் புளிபஜாா் சிவகாமிபுரம் தெரு பகுதியில் திமுகவினா் வாக்காளா்களுக்கு பணம் கொடுப்பதாக கிடைத்த தகவலின் பேரில் தோ்தல் பறக்கும் படையினருடன் போலீஸாா் அப்பகுதியில் சோதனை நடத்தினா். அப்போது அப்பகுதியை சோ்ந்த ராஜ்குமாா்(23), சின்ன சுரைக்காய்பட்டி தெருவைச் சோ்ந்த குருமணி(26) ஆகியோா் வாக்காளா்களுக்கு பணம் விநியோகிப்பது தெரியவந்தது. இதையடுத்து அவா்களிடமிருந்த ரூ.38 ஆயிரத்தை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இதுகுறித்து புகாரின் பேரில் ராஜ்குமாா், குருமணி ஆகியோா் மீது தெற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.