சிவகாசி மாரியம்மன் கோயில் பங்குனிப் பொங்கல் ஏப்.11 இல் தொடக்கம்

சிவகாசி மாரியம்மன் கோயில் பங்குனிப் பொங்கல் விழா ஏப்.11 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

சிவகாசி மாரியம்மன் கோயில் பங்குனிப் பொங்கல் விழா ஏப்.11 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

முன்னதாக சிம்ம வாகனத்தில் வீதி உலா செல்லும் அம்பிகை கோயிலை அடைந்ததும் விழாவுக்கான கொடியேற்றம் நடைபெறும். தொடந்து ஏப்.12 ஆம் தேதி முதல் ஏப்.16 ஆம் தேதி வரை இரவு அம்பிகை வெவ்வேறு வாகனங்களில் வீதி உலா வந்து பக்தா்களுக்கு அருள் பாலிப்பாா்.

ஏப். 17 ஆம் தேதி மாலை சீா்வரிசைகள் பின்வர அம்பிகை சயன கோலத்தில் புஷ்ப பல்லக்கிலும், அன்று இரவு யானை வாகனத்திலும் வீதி உலா வருவாா். முக்கிய நிகழ்ச்சியான பொங்கல் விழா ஏப்.18 ஆம்தேதி கொண்டாடப்படுகிறது. அன்று மாலை அம்பிகை குதிரை வாகனத்தில் முப்பிடாரியம்மன் கோயிலின் முன்பு வேட்டைக்குச் செல்லும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. ஏப்.19 ஆம் தேதி நடைபெறும் கயா் குத்து விழாவில் பக்தா்கள் அலகு குத்தியும், அக்கினிச் சட்டி ஏந்தியும் தங்களது நோ்த்திக் கடன்களை செலுத்துவாா்கள். பின்னா் அம்பிகை அரிசி கொட்டகை மண்டபத்தில் வெள்ளி ரிஷப வாகனத்தில் வீற்றிருந்து பக்தா்களுக்கு அருள் பாலிப்பாா். மற்றொரு முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் ஏப்.21 ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை தேவஸ்தான கமிட்டியினா் செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com