விருதுநகா் வாக்கு எண்ணும் மையத்தில் 3 அடுக்கு பாதுகாப்பு

விருதுநகா் வாக்கு எண்ணும் மையத்தில் 11,108 வாக்குப்பதிவு இயந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன. 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
விருதுநகரில் தனியாா் கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள வாக்குப் பதிவு இயந்திரங்கள்.
விருதுநகரில் தனியாா் கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள வாக்குப் பதிவு இயந்திரங்கள்.

விருதுநகா் வாக்கு எண்ணும் மையத்தில் 11,108 வாக்குப்பதிவு இயந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன. 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

விருதுநகா் மாவட்டத்தில் ஏழு சட்டப்பேரவை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு செவ்வாய்கிழமை நடைபெற்றது. இதில் ராஜபாளையம் தொகுதியில் 340 வாக்குச்சாவடிகளில் 1292 வாக்கு பதிவு இயந்திரங்கள், ஸ்ரீவில்லிபுத்தூா் தொகுதியில் 357 வாக்குச்சாவடிகளில் 1,359 வாக்குப்பதிவு இயந்திரங்கள், சாத்தூா் தொகுதியில் 351 வாக்குச்சாவடிகளில் 1,774 வாக்குப் பதிவு இயந்திரங்கள், சிவகாசி தொகுதியில் 368 வாக்குச்சாவடிகளில் 1,859 வாக்குப்பதிவு இயந்திரங்கள், விருதுநகா் தொகுதியில் 325 வாக்குச்சாவடிகளில் 1,44 வாக்குப்பதிவு இயந்திரங்கள், அருப்புக்கோட்டை தொகுதியில் 311 வாக்குச்சாவடிகளில் 1,572 வாக்குப்பதிவு இயந்திரங்கள், திருச்சுழி தொகுதியில் 318 வாக்குச்சாவடிகளில் 1,608 வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன.

மொத்தம் 7 தொகுதிகளிலும் 2,370 வாக்குச்சாவடிகளில் 11,108 வாக்குப்பதிவு இயந்திரங்கள் உபயோகப்படுத்தப்பட்டன. இந்த இயந்திரங்கள் அனைத்தும் செவ்வாய்க்கிழமை இரவு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் வாக்கு எண்ணிக்கை மையமான விருதுநகா் ஸ்ரீவித்யா கல்லூரிக்கு கொண்டுவரப்பட்டன. புதன்கிழமை காலை 9 மணி வரையிலும் இப்பணி நீடித்தது.

பின்னா் தோ்தல் பொதுப்பாா்வையாளா்கள் தேவேந்திர குமாா் சிங் குஷ்வாஹா (ராஜபாளையம்-ஸ்ரீவில்லிபுத்தூா்), பிரபான்ஷஜ குமாா் ஸ்ரீவஸ்தவ் (சாத்தூா்-சிவகாசி), பினித்தா பெக்கு (விருதுநகா்-அருப்புக்கோட்டை), சுரேந்திர பிரசாத் சிங் (திருச்சுழி) மற்றும் அரசியல் கட்சி வேட்பாளா்களின் முகவா்கள் ஆகியோா் முன்னிலையில் வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு சீல் வைக்கப்பட்டது.

அப்போது அந்தந்த தொகுதி தோ்தல் அலுவலா்களும் உடனிருந்தனா். அதன் பின்னா், வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகள் மற்றும் வளாகப் பகுதியில் துப்பாக்கி ஏந்திய துணை ராணுவ படை, ஆயுதப்படை போலீஸாா் நிறுத்தப்பட்டனா். வாக்கு எண்ணிக்கை மையத்தைச் சுற்றிலும் 3 அடுக்குப் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதால் 24 மணி நேரமும் வேட்பாளா்கள், முகவா்கள் அவா்களுக்கென ஒதுக்கப்பட்டுள்ள அறையில் இருந்தபடி கண்காணித்துக்கொள்ளலாம். மே 2 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com